Same as permanent address
பாசன விவரம் என்பதற்கு நஞ்சை, மானாவாரி, கிணறு, ஆறு பாசன விபரத்தை குறிப்பிட வேண்டும்.
கரும்பு பயிர் சாகுபடி செய்தால் இங்கே கிளிக் செய்யவும்
1.நான் எனக்கு தேவையான விதைப்பகுதியை வெளிமார்கெட்டில் வாங்க உள்ளதால் விதைப்பகுதியை ரொக்கமாக வழங்க கோருகிறேன்.
2.நான் பயிரிடும் பயிருக்கு தொழு உரம் தேவையாக இருப்பதால் வெளிமார்க்கெட்டில் வாங்க உர பகுதியில் 50% தொகையை ரொக்கமாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
3.சங்கத்தில் உர இருப்பு இல்லாத பட்சத்தில் உரப்பகுதி தொகை முழுவதும் ரொக்கமாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
4.பூச்சிமருந்து வெளிமார்க்கெட்டில் வாங்க உள்ளதால் 100% ரொக்கமாக வழங்க கோருகிறான்.
5.அடமான கடனாக இருந்தால் தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் பிரிவு 41 மற்றும் அதன் கீழ் ஏற்படுத்தப்பட்ட விதி எண்-65ல் தெரிவித்துள்ளபடி படிவம் 26-ஐ இத்துடன் இணைத்துள்ளேன்.
6.கடனுக்கு தேவைப்படும் உறுப்பினர் பங்குத்தொகை செலுத்த சம்மதிக்கிறேன்.
7.நான் வேறு கூட்டுறவு சங்கம்/வங்கியில் பயிர் கடன் பெற்று நிலுவையிலோ அல்லது தவணைத் தவறியோ இல்லை என சான்றளிக்கிறேன்
இத்துடன் நான் ஈடாகக் கொடுத்திருக்கும் நிலம்/நகைகள் எனக்கு மட்டும் பாத்தியப்பட்டது. மேற்படி சொத்துக்களை இக்கடனுக்கு ஈடாக கொடுக்க எனக்கு பாத்தியமுண்டு. இந்த நகைகளை தாங்கள் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் மறு ஈடு வைக்க இதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறேன்.
நான் வாங்கும் இக் கடனை உரிய கெடு தேதிக்குள் திருப்பி செலுத்தாதபட்சத்தில் சங்கத்தின் துணைவிதிகளின்படி இக்கடனுக்கு ஈடு வழங்கியுள்ள நிலம்/நகையை ஏலம் போட்டு ஏலத்தில் கிடைத்த தொகையை கடனுக்கு வரவு வைத்துக்கொள்ளவும். அத்தொகை கடனுக்கு போதவில்லை என்றால் மீதமுள்ள தொகையை நான் செலுத்தவும். அவ்வாறு செலுத்தவில்லை எனில் என் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறேன்.
இந்த கடனுக்கு ஈடு வழங்கியுள்ள கீழ்கண்ட சொத்துக்கள் மூலமும் சங்கத்தாருக்கு யாதொரு நஷ்டமும் குறைவும், கெடுதலும் ஏற்படாமல் பாதுகாத்து கொடுக்கவும், இதன் மூலம் ஒப்புக்கொள்கிறேன். மேலும் கடன் பெறும்போது ஈடுகாட்டும் நிலம்/நகைமதிப்பு குறைந்தால் அக்குறைவு மதிப்புக்கான கடன் தொகையை திருப்பி செலுத்தவும் அல்லது கூடுதல் நிலம்/நகையை ஈடு கொடுக்கவும் இதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறேன்.
நான் வாங்கும் கடனை மேற்படி பத்திரத்தில் காணப்படும் நிபந்தனைகளுக்கும் அதில் காணப்படாததும் இப்போதுள்ள சங்க விதிகளிலும், துணைவிதிகளிலும், இனி ஏற்படும் விதிகளிலும் உபவிதிகளிலும் உள்ள நிபந்தனைகளுக்கும், இந்த விண்ணப்பத்தில் உள்ள விவரங்களுக்கு நானும், எனது வாரிசுகளும் என் பிரதிநிகளும் கட்டுப்பட்டவர்கள் என உறுதி கூறுகிறேன்.
Application Submit