நல நிதி திட்டம்
Image
கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் நல நிதி திட்டம்
உறுப்பினர்கள் நலநிதி
Please enter your Mobile No.

முக்கிய அறிவுரை


நோக்கம் :
  • கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு நிதி உதவி அளித்தல்.
  • இத்திட்டத்தில் சேரத் தகுதியான ஒவ்வொரு உறுப்பினரும் உறுப்பினர் நல நிதி திட்டத்தில் உறுப்பினராய்ச் சேர்ந்து பயனடையலாம்.
  • இத்திட்டத்தில் உறுப்பினராய் சேர்ந்த உறுப்பினர் மாத சந்தா ரூ.100/- செலுத்த வேண்டும்.
உதவித்தொகைகள் :
  • உறுப்பினர் இயற்கையாக மரணமடைந்தால் (ஈமச் சடங்கு செலவு உட்பட) : ரூ.50,000
  • உறுப்பினர் விபத்தினால் மரணமடைந்தால் (ஈமச் சடங்கு செலவு உட்பட) : ரூ.1,00,000
  • விபத்து ஏற்பட்டு இரண்டு கண்கள் பார்வையிழந்தால், இரண்டு கைகள் மற்றும் கால்கள் செயலிழந்தால் : ரூ.50,000
  • விபத்து ஏற்பட்டு ஒரு கண் பார்வையிழந்தால், ஒரு கை மற்றும் கால் செயலிழந்தால் : ரூ.25,000
  • விபத்தில் மரணமடைந்த உறுப்பினரின் 21 வயதுக்கு மேற்படாத இரண்டு ஆண்/பெண் குழந்தைகளின் மேல்படிப்புக்காக : ரூ.10,000
  • விபத்தில் மரணமடைந்த உறுப்பினரின் 21 வயதுக்கு மேற்பட்ட இரண்டு பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக : ரூ.10,000
  • விபத்தில் மரணமடைந்த உறுப்பினரின் 18 வயதுக்கும் குறைவான பெண் குழந்தையின் திருமணத்திற்காக : ரூ.10,000
கருணைத் தொகை :

இத்திட்டத்தின் கீழ் யாதொரு உதவித்தொகையும் பெறாத உறுப்பினர் ஒருவருக்கு அவர் உறுப்பினரிலிருந்து விலகும் போது இந்நிதியிலிருந்து குறைந்த பட்சம் ரூ.7,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000 கருணைத் தொகையாக வழங்கப்படும்.