Image
பணியாளர் நலன் உள்நுழைவு
Please enter your Mobile No.

முக்கிய அறிவுரை


கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர் நல நிதி திட்டம்
நோக்கம் :
  • கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு நிதி உதவி அளித்தல்.
  • இத்திட்டத்தில் சேரத் தகுதியான ஒவ்வொரு பணியாளரும் அவர் விருப்பப்பட்டால் பணியாளர் நல நிதி திட்டத்தில் உறுப்பினராய்ச் சேர்ந்து பயனடையலாம்.
  • இத்திட்டத்தில் உறுப்பினராய் சேர்ந்த பணியாளரின் ஒவ்வொரு மாத சம்பளத்திலிருந்து ரூ.300/- பிடித்தம் செய்யப்படும்.
உதவித்தொகை விவரம் :
  • பணியாளர் இயற்கையாக மரணமடைந்தால் (ஈமச் சடங்கு செலவு உட்பட) - ரூ 1.00 இலட்சம்
  • பணியாளர் விபத்தினால் மரணமடைந்தால் (ஈமச் சடங்கு செலவு உட்பட) - ரூ 5.00 இலட்சம்
  • விபத்து ஏற்பட்டு இரண்டு கண்கள் பார்வையிழந்தால், இரண்டு கைகள் மற்றும் கால்கள் செயலிழந்தால் - ரூ 2.50 இலட்சம்
  • விபத்து ஏற்பட்டு ஒரு கண் பார்வையிழந்தால், ஒரு கை மற்றும் கால் செயலிழந்தால் - ரூ 1.50 இலட்சம்
  • விபத்தில் மரணமடைந்த பணியாளரின் 21 வயதுக்கு மேற்படாத இரண்டு ஆண் / பெண் குழந்தைகளின் மேல்படிப்புக்காக - தலா ரூ 25,000
  • விபத்தில் மரணமடைந்த பணியாளரின், 21 வயதுக்கு மேற்பட்ட இரண்டு பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக - தலா ரூ 25,000
  • விபத்தில் மரணமடைந்த பணியாளரின் 18 வயதுக்கும் குறைவான பெண் குழந்தையின் திருமணத்திற்காக (21 வயது நிரம்பும்போது பெற்றுக்கொள்கிற வகையில் வங்கியில் முதலீடு) - தலா ரூ 25,000

இத்திட்டத்தின் கீழ் யாதொரு உதவித்தொகையும் பெறாத பணியாளர் ஒருவருக்கு அவர் பணியிலிருந்து ஓய்வு பெறும் போது இந்நிதியிலிருந்து ரூ.25,000/- கருணைத் தொகையாக வழங்கப்படும்.