பொது சேவை மையங்கள் (CSCs)

பொது சேவை மையங்கள் (CSCs)


முன்னுரை:

பொதுச் சேவை மையங்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தினை(Digital India Program) நிறைவேற்ற உதவுகிற ஒரு முக்கிய அடித்தளமாகும். மத்திய மற்றும் மாநில அரசு, கணினிகள் மற்றும் இணைய வசதி மிகவும் குறைவாக அல்லது பெரும்பாலும் இல்லாத கிராமபுற மற்றும் தொலைதூர இடங்களில் பொதுச் சேவை மையங்கள் மூலம் அத்தியாவசிய பொது பயன்பாட்டு மின்னனு சேவைகளை வழங்கி வருகின்றன. இம்மையங்கள் ஒரே இடத்தில் பல பரிவர்த்தனைகளுக்கான சேவைகளை வழங்கி வருகிறது. அத்தியாவசிய பொது பயன்பாட்டு மின்னனு சேவைகளை தேவைப்படும் குடிமக்களுக்கு வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கும் குடிமக்களுக்கும் உள்ள தொடர்பினை மேம்படுத்த பொதுச் சேவை மையங்கள் உதவுகின்றன. .

கூட்டுறவு நிறுவனங்களில் பொதுச் சேவை மையங்கள்:

மேற்காணும் குறிகோள்களுடன் 2010-2011-ஆம் ஆண்டில் 537 பொதுச் சேவை மையங்கள் நிறுவப்பட்டன. அதன் பிறகு, அதிகரித்து வந்த பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பொதுச் சேவை மையங்கள் மாநிலத்தின் பெரும்பாலும் எல்லா பகுதிகளிலும் மற்றும் அனைத்து வகையான கூட்டுறவு நிறுவனங்களிலும் (PACCS, PCARDBS, UCCS, ECS, CMS, CCWS,etc.) நிறுவப்பட்டுள்ளன.தற்போது, (31.07.2021வரை) மாநிலம் முழுவதும் 4,412 பொதுச் சேவை மையங்கள் உள்ளன.

அனைத்து மின்னனு சேவைகளையும் கிடைக்கச் செய்வதன் மூலம் பொது மக்களுக்கு சேவை வழங்குவது மற்றும் பொதுச் சேவை மையங்களை இயக்கும் கூட்டுறவு சங்கங்களில் வருவாயை அதிகரிப்பது ஆகிய இரு முக்கிய நோக்கங்களை மையமாகக் கொண்டு பொதுச் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) ஒருங்கிணைப்பு நிறுவனமாக செயல்பட்டு ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட மின்-ஆளுமை சங்கங்கள் (District e-Governance Societies) மூலமாக பொதுச் சேவை மையங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.

முன்னதாக பொதுச் சேவை மையங்கள், இ-மாவட்டம் (e-District) மற்றும் டிஜி (e-Sevai) போர்ட்டல்கள் போர்ட்டல்கள் மூலம் சேவையை வழங்கி வந்தன. தற்போது, இ-மாவட்டம் மற்றும் இ-சேவை போர்ட்டல்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு தற்போது இது இ-மாவட்டம் போர்ட்டல் (e-District Portal)என்று அழைக்கப்படுகிறது.

இ - மாவட்டம் மற்றும் இ - சேவை போர்ட்டல்கள் மூலம் வழங்கப்படும் சேவைகள்
வருவாய் துறை சேவைகள்:
  • சாதிச் சான்றிதழ்
  • இருப்பிடச் சான்றிதழ்
  • வருவாய் சான்றிதழ்
  • பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
  • முதல் பட்டதாரி சான்றிதழ்
  • கைவிடப்பட்ட மகளிர் சான்றிதழ்
பதிவுத்துறை சேவைகள்:
  • வில்லங்க சான்றிதழ்
  • சான்றிதழ் நகல் மற்றும் பிற சேவைகள்..,
சமூக நலத்துறை சேவைகள்:
  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்.
  • EVR மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவிதிட்டம்.
  • அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண்கள் திருமண உதவித்திட்டம்.
கல்வி உதவித்தொகை :
  • இணையவழி (Online) மூலம் பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான MBC கல்வி உதவித்தொகை.
  • இணையவழி (Online)மூலம் பட்டியலினத்தவர்(SC),பழங்குடியின மலைவாழ்மக்கள்(ST), மற்றும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை.
டிஜிசேவா போர்ட்டல்கள்(Digi Seva) மூலம் வழங்கப்படும் சேவைகள்:
  • நிரந்தர கணக்கு எண்(PAN Card) சேவைகள்
  • ஆதார் அட்டை(Aadhaar Card)சேவைகள்
  • காப்பீடு பிரிமியம் (Insurance)சேவைகள்
  • கடவுச்சீட்டு(Passport) சேவைகள்
  • கைப்பேசி மற்றும்DTH ரீசார்ஜ்(Recharge)சேவைகள்
  • பேருந்து மற்றும் தொடர்வண்டி e-ticket பயணச்சீட்டு முன்பதிவு சேவைகள்
கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்படும் பொதுச் சேவை மையங்களின் செயல்பாடுகள்:

2011-2012 முதல் 2021-22 வரையிலான பொதுச் சேவை மையங்களின் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

வ.எண்

 

வருடம்

பொதுச் சேவை மையங்களின் எண்ணிக்கை

நிகர வருமானம்

(ரூபாய் கோடியில்)

1 2011-12 1638 2.38
2 2012-13 1638 3.28
3 2013-14 1724 3.98
4 2014-15 4007 5.73
5 2015-16 4423 19.11
6 2016-17 4469 20.81
7 2017-18 4407 28.39
8 2018-19 4403 25.67
9 2019-20 4411 23.24
10 2020-21 4412 16.29
11 2021-22(up to 31.07.21) 4412 3.69