கூட்டுறவுத் துறை பற்றி

கூட்டுறவுத்துறை பற்றி

முன்னுரை

நாட்டின் கூட்டுறவு இயக்கத்தில் தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. இந்த கூட்டுறவுகளின் பிரதான நோக்கங்கள் ஏழை மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் சேவை செய்வதாகும். விவசாய உற்பத்தியை அதிகரிப்பதில் மட்டுமல்லாமல், சரியான நேரத்தில் பயர் கடன்கள் வழங்குதல், வட்டி இல்லாத பயிர் கடன்களை சரியான தேதிக்குள் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு நீட்டிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதில் கூட்டுறவு முக்கிய பங்கு வகிக்கிறது.

கூட்டுறவு சங்கங்கள் குறுகிய கால, மத்தியகால, நீண்ட கால கடன்கள், பயிர் கடன்கள் பண்ணை சாரா கடன்களை வழங்குகின்றன. பயிர் காப்பீட்டு திட்டமும் கூட்டுறவு சங்கங்களால் செயல்படுத்தப்படுகிறது. இதுவல்லாமல் நகைக்கடன் மற்றும் தானிய ஈட்டுக்கடன்களும் கூட்டுறவுச் சங்கங்களால் வழங்கப்படுகின்றன.

கூட்டுறவு நிறுவனங்கள் பொது விநியோக திட்டங்களை நியாயவிலைக் கடைகள் மூலம் செயல்படுத்துகின்றன

திறந்த சந்தையில் அத்தியாசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் போதெல்லாம், (துவரம் பருப்பு உளுந்தம் பருப்பு, மிளகாய், புளி, நல்லெண்ணெய், வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்கள்) அவைகள் நியாயமான விலையில் கிடைக்கும் இடங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவு விற்பனை நிலையங்களில் சந்தை விலையை விட குறைவான விலையில் சந்தை தலையீட்டு திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகின்றன.

சந்தை தலையீட்டு நடவடிக்கையாக, கூட்டுறவு சங்கங்கள் காய்கறிகளை நியாமான விலையில் விற்பனை செய்வதற்காக ”பண்ணை பசுமை நுகர்வோர் விற்பனை நிலையங்களை” நடத்துகின்றன. அவற்றில் காய்கறிகளின் விலை தற்போதுள்ள சந்தை விலையை விட குறைவாக உள்ளன

கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் ”அம்மா மருந்தகம்” மூலம் தரமான மருந்துகளை தள்ளுபடி விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வது பொது நலனுக்காக சேவைகள் வழங்கப்படுவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு

வேளாண் கிளினிக்குகள் மற்றும் வேளாண் சேவை மையம் ஆகியவை விவசாயிகளின் நலனுக்காக கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன

கூட்டுறவு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு உரங்களை நியாயமான விலையில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் மாநிலம் முழுவதும் வழங்குகின்றன

பெரிய அளவிலான பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் (LAMPs) பழங்குடி மக்களை மேம்படுத்தும் நோக்கில் அவர்களின் விவசாய விளைபொருட்களான சாமை, வரகு, புளி மற்றும் தேன் போன்ற வகைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் பொருட்டு அவற்றை சந்தைப்படுத்த உதவுகின்றன

ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டம் தற்போது மாநிலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் கூட்டுறவுகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி, பங்கு மூலதனம், விளிம்பு தொகை போன்றவற்றைக் வழங்கி கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்காகவும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பகுதி அடிப்படையிலான திட்டமாகும்.

கூட்டுறவு ஒன்றியங்கள் உறுப்பினர்களுக்கு கூட்டுறவு கல்வியை வழங்கி வருகின்றன. கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

சாதி/வருமான சான்றிதழ்கள், பிறப்பு/இறப்பு சான்றிதழ்கள், சிட்டாவுக்கான பட்டா, ஈ.வே.ரா மணியம்மாள் நினைவு திருமண உதவி திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள், மின்சார கட்டணம் மற்றும் காப்பீட்டு பிரீமியம், மொபைல் ரீசார்ஜ், டிஜிட்டல் புகைப்படம், மின்டிக்கெட் போன்ற அனைத்து சேவைகளையும் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக கூட்டுறவு நிறுவனங்களால் பொது சேவை மையங்கள் நடத்தப்படுகின்றன

சரகத் துணைப்பதிவாளர்கள் கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேர்தலை நடத்துகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழுக்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களுக்கும் இடையே எழும் மோதல்களை சரகத் துணைப்பதிவாளர்கள் தீர்க்கின்றனர். கூட்டுறவு சங்கங்களின் ஆய்வு, சட்டரீதியான விசாரணை, தண்டத்திர்வை மற்றும் நடுவர் பணிகள் ஆகியவற்றை அவர்கள் கண்காணித்து வருகின்றனர்