பொது விநியோகத் திட்டத்தில் கூட்டுறவு

கூட்டுறவு நியாயவிலைக் கடைகள்

மொத்த நியாயவிலைக் கடைகள்
35,039 கடைகள் தமிழ்நாடு முழுவதும்
முழுநேர கடைகள்
24,684 முழுநேர நியாயவிலைக் கடைகள்
பகுதிநேர கடைகள்
10,355 பகுதிநேர நியாயவிலைக் கடைகள்

தமிழ்நாடு அரசு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தி, இந்தியாவில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மாநிலம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோகத்திட்ட பொருட்களை திறம்பட விநியோகிக்க ஏதுவாக கூட்டுறவு சங்கங்களால் மொத்தம் 35,039 நியாயவிலை கடைகள் கீழ்கண்ட வகையில் நடத்தப்படுகின்றன.

● முழுநேர நியாயவிலை கடைகள் – 24,684
● பகுதி நேர நியாயவிலை கடைகள் – 10,355

அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்ட பொருட்கள் (துவரம் பருப்பு, பாமாயில்) ஆகியவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) மூலம் கொள்முதல் செய்யப்பட்டு நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. நியாயவிலைக்கடைகளுடன் பரவலான விநியோக தொடரமைப்பை கூட்டுறவுகள் கொண்டுள்ளன மற்றும் 31.03.2025 நாளது வரையில் பெரும்பான்மையான நியாயவிலைக் கடைகள் அதாவது 35,039 நியாயவிலைக் கடைகள் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

நியாயவிலைக் கடைகளின் விவரம் (31.03.2025)

வ. எண். கூட்டுறவுச் சங்கங்களின் வகைகள் நியாய விலைக்கடைகளின் எண்ணிக்கை
1. மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை 3,617
2. கூட்டுறவு விற்பனைச் சங்கம் 2,703
3. பிரதம கூட்டுறவு பண்டகசாலை 1,925
4. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 25,410
5. நகர கூட்டுறவு கடன் சங்கம் 1,056
6. பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கம் 263
7. இதர வகை கூட்டுறவு சங்கம் 65
மொத்தம் 35,039
குடும்ப அட்டைதாரர்கள்
2.12 கோடி குடும்பங்களுக்கு சேவை
மண்ணெண்ணெய் நிலையங்கள்
240 மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்கள்

கூட்டுறவு நியாயவிலைக் கடைகளின் பங்கு

தமிழ்நாட்டில் உள்ள 35,039 கூட்டுறவு நியாயவிலைக் கடைகளின் மூலம் 2.12 கோடி குடும்ப அட்டைதாரர்கள் சேவையைப் பெறுகின்றனர். நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்துடன் அரசு மானியத்துடன்கூடிய சிறப்பு பொது விநியோகத்திட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், ஊட்டி டீ, அரசு உப்பு, பனைவெல்லம், சிறுதானியங்கள், 5 kg ./ 2 kg LPG சிலிண்டர்கள் போன்ற கட்டுப்பாடற்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், 240 மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்கள் மூலம் தகுதியுள்ள குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுகிறது.

மாதாந்திர வழங்கீட்டு அளவு

வ.எண். பொருளின் பெயர் வழங்கீட்டு அளவு விலை / கிலோ மற்றும் அமலுக்கு வந்த தேதி
1 அரிசி NPHH- குடும்ப அட்டைதாரர்களுக்கு உச்ச வரம்பு 20 கிலோ
ஒரு நபர் – 12 கிகி
2 நபர் – 16 கிகி
3 நபர் – 20 கிகி
4 நபர் – 20 கிகி
4 நபருக்கு மேல், ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் கூடுதலாக தலா 5 கிகி(சிறியவர் உட்பட)
விலையில்லை
(அரசாணை (நிலை) எண் 45, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் (டி1) துறை, நாள்: 17.05.2011
2 கோதுமை சென்னை நகர் பகுதி, சென்னை புறநகர் பகுதி மற்றும் மாவட்ட தலைமை இடங்கள் - 10கிலோ
மற்ற பகுதிகள் - 5 கிலோ
விலையில்லை
(அரசாணை (நிலை) எண் 16, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் (டி1) துறை, நாள்: 02.02.2017
3 சர்க்கரை ஒரு மாதத்திற்கு நபர் ஒன்றுக்கு 500 கிராம் முதல் அதிகபட்சம் 2 கிலோ வரை
சர்க்கரை அட்டை:
2 அலகு – 1 +3 = 4 கிலோ
3 அலகு – 1.5+ 3 = 4.5 கிலோ
4 அலகு மற்றும் அதற்கு மேல் – 2+3=5 கிலோ (அதிகபட்சம்)
ரூ.25.00 (01.11.2017 முதல்)
AAY-குடும்ப அட்டைதாரர்களுக்கு Rs:13.50
4 மண்ணெண்ணெய் சென்னை மற்றும் பிற பகுதிகள்:
இடம் மற்றும் எரிவாயு உருளை (Cylinder) இருப்பைப் பொறுத்து 3லிருந்து 15 லிட்டர் வரை
2 எரிவாயு உருளை – இல்லை
1 எரிவாயு உருளை – 3 லிட்டர்
எரிவாயு உருளை இல்லாதாருக்கு:
-15லிட்டர்-(நகர்ப்புறங்களுக்கு)
-10லிட்டர்(கிராமப்புறங்களுக்கு)
ரூ.15.00 - ரூ. 16.50 (04.09.2020 முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது.)
5 பாமாயில் ஒரு குடும்ப அட்டைக்கு 1 லிட்டர் ரூ.25.00 (01.02.2011 முதல்)
6 துவரம்பருப்பு ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ ரூ.30.00 (01.02.2011 முதல்)
7 OAP ஒரு குடும்ப அட்டைக்கு 4 கிலோ அரிசி விலை இல்லை
8 ANP ஒரு குடும்ப அட்டைக்கு 10 கிலோ அரிசி விலை இல்லை
9 AAY ஒரு குடும்ப அட்டைக்கு 35 கிலோ அரிசி விலை இல்லை
நகரும் கடைகள்
2,494 நகரும் நியாயவிலைக் கடைகள்
LPG சிலிண்டர்கள்
ரூ.62.68 லட்சம் விற்பனை (2022-25)
சிறுதானியங்கள்
ரூ.2.58 கோடி விற்பனை

நகரும் நியாயவிலைக் கடைகள்

தொலைதூரப் பகுதிகள், மலைப்பகுதிகள், ஆறுகள், நெடுஞ்சாலைகள் மற்றும் இதர இயற்கை இடர்பாடுகளால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உணவுப் பொருட்களை தடையின்றி தொடர்ந்து விநியோகம் செய்ய 2,494 நகரும் நியாயவிலைக் கடைகள் மாநிலம் முழுவதும் செயல்படுகின்றன. இதன் மூலம் பழங்குடியினரும், எளிதில் அணுக முடியாத பகுதிகளில் வசிப்பவர்களும் பயன்பெறுகின்றனர்.

நியாயவிலைக்கடையில் பலவகையான பொருட்களின் விற்பனை

நியாயவிலைக் கடைகளின் வருவாயை அதிகரிக்கும் வணிக நடவடிக்கைகள் பின்வருமாறு:-

5 கிலோ / 2 கிலோ LPG சிலிண்டர்கள் விற்பனை

நியாயவிலைக் கடைகள் மூலம் 5 kg / 2 kg LPG (FTL) சிலிண்டர்களின் சில்லறை விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு பயனளிக்கிறது. குறிப்பாக, இந்த சிலிண்டர்களை வாங்குவதற்கு முகவரிச் சான்று தேவையில்லை.

வருடம் விற்பனை தொகை (ரூபாய் இலட்சத்தில்)
2022-2310.02
2023-2440.63
2024-2562.68
ISO சான்றிதழ்
10,149 ISO 9001, 2,059 ISO 28000
நவீனமயமாக்கப்பட்ட கடைகள்
5,481 கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன
புதிய கடைகள்
2,394 புதிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன

பொது விநியோகத்திட்டத்தின் மூலமாக நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைதல்

ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளை (UN Sustainable Development Goals) அடைவதற்கு தமிழ்நாட்டின் அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டத்தின் பங்களிப்பு குறிப்பாக:

  • இலக்கு எண் 1 – வறுமையின்மை
  • இலக்கு எண் 2 – பசியின்மை
  • இலக்கு எண் 3 – நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு

இந்தக் கொள்கை தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூக நலத்திற்கான அடித்தளமாக தொடர்கிறது.