இந்திய நாடாளுமன்றத்தில் சட்டமியற்றப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம் குடிமக்கள் கோரும் தகவல்களை பெறுவதற்கான உரிமை தொடர்பான விதிகள் மற்றும் நடைமுறைகளை வகுத்துள்ள சட்டமாகும். குடிமக்கள் குறைந்தபட்ச உதவியுடன் கோரும் குறிப்பிட்ட தகவல்களுக்கு ஒவ்வொரு பொது அதிகாரமும் [Public Authority] தவறாமல் பதிலளிக்க வேண்டும் என இச்சட்டம் அறிவுறுத்துகிறது
குடிமக்களின் உரிமை, அரசாங்கத்தின் செயல்பாட்டில் வெளிப்படை தன்மை, அரசு அலுவலர்களின் பொறுப்புடைமையினை மேம்படுத்துதல், ஊழலை கட்டுப்படுத்துதல் மற்றும் “மக்களுக்காக" எனும் ஜனநாயகத்தில் உண்மையான அர்த்தத்தில் செயல்ப்படுவதே இச்சட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். அரசாங்கத்தின் செயல்பாடுகளை குடிமக்களுக்கு மிக எளிய முறையில் தெரிவிக்கும் பாலமாக இச்சட்டம் செயல்படுகிறது.
கூட்டுறவு சங்கங்களில் பதிவாளரின் கட்டுப்பட்டிலுள்ள பல்வேறு நிறுவனங்களின் பணி குறித்து தகவல்கள் கோரும் பொதுமக்களிடமிருந்து நாள்தோறும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மனுக்கள் பெறப்படுகிறது..
மனுதாரர் கோரிய தகவல்கள், விவரங்கள், சுற்றறிக்கைகள் போன்றவை ஒரு குறிப்பிட்ட அலுவலகம் அல்லது ஒரு குறிப்பிட்ட மாவட்டம் / மண்டலத்திற்கு சம்பந்தப்பட்டதாக இருந்தால் அம்மனு உடனடியாக தகவல் பெறும் உரிமைச் சட்டம் சட்டப்பிரிவு 6(1) – இன் கீழ் அந்த குறிப்பிட்ட மாவட்டம் / மண்டலத்திற்கு நடவடிக்கைகாக மாற்றப்படுகிறது. மனுதாரரால் கோரப்பட்ட தகவல்கள் வேறு ஏதேனும் பொது அதிகார அமைப்புடன் தொடர்புடையதாக இருந்தால், அம்மனுவானது அக்குறிப்பிட்ட துறைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் சட்டப்பிரிவு 6(3) – இன் கீழ் மாற்றி அனுப்பப்படுகிறது.
கூட்டுறவுத் துறையின் தலைமை அலுவலகமான பதிவாளர் அலுவலகம் இத்துறை தொடர்பாக முழுமையாக வழங்கக்கூடிய தகவல்கள், கூட்டுறவுச் சங்கங்களை நிர்வகிக்கும் செயல்கள் மற்றும் விதிகள் பற்றிய தகவல்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறைகள்ஆகியவை தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குகிறது.
ஒரு மனுவிற்கான முதல் தகவல் வழக்கமாக மனு வரபெற்ற 30 நாட்களுக்குள் மனுதாரருக்கு வழங்கப்படுகிறது . இம்மனு தொடர்பாக பெறப்படும் மேல்முறையீடுகளுக்கான தகவல்கள் மேல்முறையீட்டு மனு பெறப்பட்ட 45 நாட்களுக்குள் வழங்கப்படுகிறது
Tகூட்டுறவு துறையின் அலுவலகங்களில் உதவி பொதுத் தகவல் அலுவலர் / பொதுத் தகவல் அலுவலர் / மேல்முறையீட்டு அலுவலர் பதவி விவரம்:
S.No |
RIGHT TO INFORMATION(RTI) |
View |
1 |
To view details of PIOs |