ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்டம் ( I.C.D.P )

ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்டம்
( I.C.D.P )


1. அறிமுகம்:

ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டமானது மத்திய அரசு நிதியுதவிடன் எட்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் மத்திய வேளாண் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ஆகும். இத்திட்டத்திற்கு தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் நிதியுதவி வழங்கி திட்டம் செயல்படுத்தப்படும் மாநிலங்களில் திட்டத்தினை கண்காணிக்கும் பணியையும் மேற்கொள்கிறது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு :
  1. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு மற்றும் தன்னம்பிக்கை நிறுவனங்களாக வளர்ச்சிப் பெற செய்கிறது
  2. இதர கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது
  3. கூட்டுறவு நிறுவனங்களிடையே சாத்தியமான செயல்பாட்டு இணைப்புகளை உருவாக்குதல்

இத்திட்டமானது மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டத்தின் கால அளவு ஐந்து ஆண்டுகளாகும். தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டமானது 1989-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது வரை 32 மாவட்டங்களில் நிறைவடைந்துள்ளது. .

ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டமானது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் இணை செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், அந்தப் பகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்ட திட்டமாக இது அமைந்துள்ளது. இதை நடைமுறைப்படுத்த நிதி உதவி அளிப்பதன் மூலமாகவும், தேவைப்படும் அத்யாவசிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலமாகவும், சிறந்த சேவையினை வங்கிகள் அளித்திடவும் நிதி ஆதாரத்தை வலுவாக்கவும் இது வழி வகுக்கிறது. மேலும் கூட்டுறவு அலுவலர்களுக்கும் / பணியாளர்களுக்கும் மனித ஆற்றல் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுவதன் காரணமாக அவர்களுடைய மேலாளும் தன்மையின் திறன் வளர்கிறது. இந்த ஒருங்கிணைந்த செயல்பாட்டின் காரணமாக கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயம் தொடர்புடைய பணிகளை சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் இணைந்து வெற்றிகரமாக செயலாற்றிட வழி வகுக்கிறது.


2. நோக்கம்

  •  தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட நிதி உதவி வழங்குதல்.
  •  சங்கங்களின் வியாபார வளர்ச்சிக்கு உதவ விளிம்புத் தொகை அளித்தல்.

3. திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி

இத்திட்டத்திற்கான நிதி மாநில அரசால் கூட்டுறவு நிறுவனங்களுக்கு கடன் மற்றும் பங்குத்தொகையாக வழங்கப்படுகிறது. மாநில அரசால் வழங்கப்பட்ட நிதி தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்திடமிருந்து மறு நிதியாக பெறப்படுகிறது.


வ.எண். செயல்பாடுகள் தேசியக் கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்திடமிருந்து அரசுக்கு அரசிடமிருந்து கூட்டுறவு சங்கங்களுக்கு
கடன் மொத்தம் கடன் பங்குத் தொகை மொத்தம்
1 சிவில் பணிகள், ஆலை மற்றும் இயந்திரங்கள், உள்கட்டமைப்பு 100% 100% 50% 50% 100%
2 மார்ஜின் மணி (பங்கு மூலதனம்) 100% 100% 50% 50% 100%

4. பயன்பாடு சேவைகள்

  • தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு கிடங்குகள், கூடுதல் கிடங்குகள் கட்டுவதற்கும், கிடங்குகளை பழுது பார்ப்பதற்கும் புதிய அலுவலகக்கட்டிடங்கள் மற்றும் வங்கிக் கிளைகள் கட்டுவதற்கும், பாதுகாப்பு அறைகள் கட்டுவதற்கும், வங்கிக் கிளைகள் மற்றும் சங்கங்களை நவீனப்படுத்தவும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
  • இத்திட்டத்தில் வங்கி முகப்பு அமைப்பதற்கும், கணினி, டிராக்டர், இரும்புப் பெட்டகம், பாதுகாப்பு கதவுகள் மற்றும் கனரக ஊர்தி ஆகியவைகள் வாங்குவதற்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது.
  • தகுதியுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக கடன் சங்கங்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் வியாபார வளர்ச்சியை மேம்படுத்த விளிம்புத் தொகை வழங்கப்படுகிறது
  • கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு, அலுவலகக் கட்டடம் மற்றும் கிடங்குகள் கட்டுவதற்கும் கணினி, தளவாடச் சாமான்கள், நவீனவிசைக் கருவிகள் வாங்குவதற்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
  • பால் கூட்டுறவு சங்கங்களுக்கு, பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கவும், பால் தர சோதனை கருவிகள், பால் குவளை, மொத்த குளிரூட்டி, பால் பதப்படுத்துவதற்கான நவீன உபகரணங்கள், ஆகியவை வாங்குவதற்கும் நிதி உதவி அளிக்கப்படுகிறது.
  • மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு நைலான் வலை, அலுமினிய பாத்திரங்கள் போன்றவைகள் வாங்குவதற்கும், மீன் விற்பனை கூடங்கள் கட்டுவதற்கும் நிதியுதவி வழங்கப்படுகின்றன.
  • தொழில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அலுவலகம், பணிமனை கட்டுவதற்கும் உபகரணங்கள் வாங்குவதற்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
  • அனைத்து துறையிலும் வியாபாரத்தை பெருக்குவதற்காக விளிம்புத் தொகை உதவியும் வழங்கப்படுகிறது.

5. திட்ட செயலாக்கக் குழு

ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டத்தினை செயல்படுத்தும் திட்ட செயலாக்க குழுவின் தலைவராக கூடுதல் பதிவாளர் / இணைப்பதிவாளர் பணிநிலையில் பொது மேலாளராகவும், கூட்டுறவு சார்பதிவாளர் திட்டத்தின் வளர்ச்சி அலுவலகராகவும் கொண்ட திட்ட செயலாக்கக்குழு மாவட்டத்தில் திட்டத்தினை செயல்படுத்துகிறது. திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி திட்ட செயலாக்க முகமையாக செயல்படுகின்றது..

திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான மாவட்ட குழு மாவட்ட அளவிலும், பதிவாளர் அலுவலக திட்ட கண்காணிப்புக் குழு மாநில அளவிலும் திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கின்றது. கூட்டுறவுத் துறை செயலாளரின் தலைமையில் ஆன மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழு இத்திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்கின்றது.

6. திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி திரும்ப செலுத்துதல்

  • ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகைக்கு வட்டி ஆண்டு ஒன்றிற்கு ரூ.9.46 சதவீதம் ஆகும்.
  • சங்கங்கள் பெற்ற கடன் தொகையை, 3 வருட சலுகைக்காலம் உட்பட 8 வருடத்திற்குள் திரும்ப செலுத்த வேண்டும். அதாவது, சங்கங்களின் நிதிச் சுமையைக் குறைக்க, முதல் 3 வருடங்களுக்கு கடனுக்கான வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 4 ஆம் ஆண்டிலிருந்து அசல் மற்றும் வட்டி வசூல் செய்யப்படுகிறது.
  • சங்கங்கள் பெற்ற பங்குத் தொகை, திட்டம் முடிவடைந்த ஆண்டிலிருந்து தொடங்கி 5 சம தவணைகளிறல் அரசுக்கு திரும்ப செலுத்தப்பட வேண்டும்.

7. ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டமானது முதற்கட்டமாக அனைத்து மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது

வ.எண்.

மாவட்டங்களின் பெயர்

திட்ட காலம்

மொத்த நிதி ஒதுக்கீடு

மொத்த நிதி பயன்பாடு

அரசு திரும்ப செலுத்தப் பட்டது

பயன்பாடு சதவீதம்

1

விருதுநகர்

1989-1995

850.42

840.86

9.56

100

2,3

கடலுர் – விழுப்புரம்

1992-1997

1508.20

1445.08

63.12

100

4,5

கோயம்புத்துர்-திருப்பூர்

1995-2001

1081.07

1080.99

0.08

100

6,7

தருமபுரி – கிருஷ்ணகிரி

1995-2001

1160.25

1160.25

0.00

100

8

திருவண்ணாமலை

1996-2001

816.58

816.58

0.00

100

9

காஞ்சிபுரம்

1998-2005

1103.88

1103.88

0.00

100

10

இராமநாதபுரம்

2000-2004

677.03

664.04

12.99

100

11

திருச்சிராப்பள்ளி

2002-2008

1216.97

1216.97

0.00

100

12

தஞ்சாவூர்

2002-2008

1101.09

1091.59

9.50

100

13,14

பெரம்பலுர்-அரியலுர்

2002-2008

937.81

926.62

11.19

100

15

திருவாரூர்

2002-2008

1222.44

1222.44

0.00

100

16

தேனி

2005-2011

987.73

978.17

9.56

100

17

தூத்துக்குடி

2005-2011

942.08

942.08

0.00

100

18

சேலம்

2009-2013

2651.58

2651.58

0.00

100

19

ஈரோடு

2009-2013

3564.43

3534.32

30.11

100

20

மதுரை

2009-2013

2439.68

2376.45

63.23

100

21

புதுக்கோட்டை

2009-2013

1437.56

1437.56

0.00

100

22

திண்டுக்கல்

2010-2013

3085.78

3078.35

7.43

100

23

சிவகங்கை

2010-2014

2743.80

2738.69

5.11

100

24

திருநெல்வேலி

2010-2014

4220.85

4201.07

19.78

100

25

கரூர்

2011-2016

2563.70

2541.02

22.68

100

26

வேலுர்

2011-2016

3169.81

3100.13

69.68

100

27

நாகப்பட்டினம்

2011-2016

4219.35

4174.08

45.27

100

28

நீலகிரி

2012-2017

3088.00

2974.43

113.57

100

29

நாமக்கல்

2016-2022

7555.24

7555.24

0.00

100

30

கன்னியாகுமாரி

2016-2022

5800.29

5790.51

9.78

100

31

திருவள்ளூர்

2016-2022

4374.88

4323.86

51.02

99

32

சென்னை

2017-2023

14646.32

14153.05

493.28

97

கூடுதல்

79166.82

78119.88

1046.94

8. ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்டம் இரண்டாம் கட்டம்

விழுப்புரம், கடலூர், விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டத்தினை இரண்டாம் கட்டமாக செயல்படுத்துதல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.    

9. திட்டத்தின் பயன்கள்

  • புதிய கட்டிடங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்களின் கட்டமைப்பு உறுப்பினர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி வணிக வளர்ச்சியையும் அதிகரித்துள்ளது.
  • கூடுதல் கிடங்குகள் கட்டப்பட்டதால் விவசாயிகள் கூடுதலாக தானிய ஈட்டுக் கடன் பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.
  • சங்கங்களுக்கு வழங்கப்படும் விளிம்புத் தொகை, நிதி ஆதாரத்தை மேலும் வலுப்படுத்தி சங்கங்களின் வியாபாரத்தினை பலவழிகளில் விரிவுபடுத்த உதவியுள்ளது.