கூட்டுறவுக் கடன் அமைப்பு என்பது மாநிலம் முழுவதும் பரந்து விரிந்த முக்கிய கடன் வழங்கும் அமைப்பு ஆகும். இது மக்களின் கடன் தேவைகளை குறைந்த வட்டி விகிதத்தில் பூர்த்தி செய்கிறது.கிராமப்புற மக்கள் தங்களின் கடன் தேவைகளுக்காக கூட்டுறவுக் கடன் நிறுவனங்களை அதிகளவில் நாடுகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுக் கடன் நிறுவனங்கள் குறுகிய காலக் கூட்டுறவுக் கடன் அமைப்பு, நீண்ட காலக் கூட்டுறவுக் கடன் அமைப்பு, நகரக் கூட்டுறவுக் கடன் அமைப்பு, பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் என நான்காக வகைப்படுத்தப்பட்டுள்ளன
குறுகிய கால கூட்டுறவுக் கடன் அமைப்பு, கிராம அளவில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களையும், மாவட்ட அளவில் மத்தியக் கூட்டுறவு வங்கிகளையும், மாநில அளவில், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியையும் கொண்ட கூட்டாட்சி அமைப்பாகும்.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் கிராமப்புற மக்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. மாநிலத்தில் 4,451 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் வேளாண் மற்றும் வேளாண் சாரா கடன்களை வழங்குவதே இச்சங்கங்களின் முக்கிய நோக்கமாகும். உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் குறுகிய கால வேளாண்மைக் கடன்கள் மற்றும் பண்ணை இயந்திரங்கள் வாங்குதல், நுண் நீர்ப்பாசனம், கறவை மாடுகள் வாங்குதல் போன்ற வேளாண் சார்ந்த பணிகளுக்காக வழங்கப்படும் கடன்கள் வேளாண் கடன்களாகும். வீட்டுக்கடன், சுய உதவி குழுக்களுக்களின் வருவாய் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் கடன்கள் மற்றும் இதர பண்ணை சாராக் கடன்கள் போன்றவை வேளாண்சாரா கடன்களாகும். இச்சங்கங்கள் விவசாய இடுபொருட்களான உரம், விதைகள் மற்றும் சிறு வேளாண் கருவிகள் விற்பனையையும் மேற்கொண்டு வருகின்றன. இவை தவிர, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளையும் நடத்தி வருகின்றன.
மாவட்ட வாரியான தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களின் எண்ணிக்கை விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வ.எண். | மண்டலத்தின் பெயர் | தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் என்ணிக்கை | கிளைகள் எண்ணிக்கை |
---|---|---|---|
1 | அரியலூர் | 64 | 1 |
2 | கோயம்புத்தூர் | 137 | 11 |
3 | கடலூர் | 159 | 0 |
4 | தருமபுரி | 131 | 2 |
5 | திண்டுக்கல் | 195 | 0 |
6 | ஈரோடு | 164 | 3 |
7 | கன்னியாகுமரி | 115 | 8 |
8 | கரூர் | 84 | 0 |
9 | கிருஷ்ணகிரி | 120 | 3 |
10 | நாகப்பட்டினம் | 122 | 6 |
11 | - | 0 | 0 |
12 | பெரம்பலூர் | 53 | 1 |
13 | புதுக்கோட்டை | 136 | 1 |
14 | இராமநாதபுரம் | 131 | 3 |
15 | சேலம் | 205 | 36 |
16 | சிவகங்கை | 125 | 3 |
17 | தஞ்சாவூர் | 243 | 6 |
18 | தேனி | 80 | 0 |
19 | திருநெல்வேலி | 158 | 2 |
20 | திருவள்ளூர் | 122 | 1 |
21 | திருவண்ணாமலை | 157 | 0 |
22 | திருவாரூர் | 137 | 6 |
23 | தூத்துக்குடி | 150 | 11 |
24 | திருச்சிராப்பள்ளி | 146 | 0 |
25 | திருப்பூர் | 182 | 4 |
26 | வேலூர் | 167 | 10 |
27 | விழுப்புரம் | 235 | 6 |
28 | விருதுநகர் | 180 | 8 |
Total | 3898 | 132 |
கடந்த ஐந்தாண்டுகளில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் செயல்பாடுகள் பின்வருமாறு
தொகை (ரூ.கோடியில்)வ.எண். |
விவரம் |
வைப்புத் தொகை |
கடன் வழங்கியது |
---|---|---|---|
1 | 2019-20 | 6,657.61 | 22,746.86 |
2 | 2020-21 | 7,131.35 | 28,276.17 |
3 | 2021-22 | 7,522.00 | 17,806.57 |
4 | 2022-23 | 7593.54 | 28549.89 |
மாநிலத்தில் 23 மத்தியக் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வங்கிகள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள், கூட்டுறவு நூற்பாலைகள் போன்ற அனைத்து இணைப்புச் சங்கங்களுக்கும் கடன் மற்றும் வங்கியியல் தொடர்பான சேவைகளை வழங்கி வருகின்றன. இவ்வங்கிகள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் வைப்புத் தொகை, நபார்டு மற்றும் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியிடமிருந்து பெறப்படும் கடன் மற்றும் மறுநிதி மூலம் நிதியாதாரங்களைப் பெறுகின்றன. இவ்வங்கிகள் வட்ட மற்றும் வட்டார அளவில் செயல்படும் 908 கிளைகளைக் கொண்டுள்ளதுடன் அவற்றின் மூலமாக பொதுமக்களுக்கு நேரிடையாக வங்கியியல் சேவைகளை வழங்கி வருகின்றன. மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைகளின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு
வ. எண் |
மத்தியக் கூட்டுறவு வங்கியின் பெயர் |
வங்கியின் செயல் எல்லையில் அமைந்து உள்ள மாவட்டம் |
கிளைகள் எண்ணிக்கை |
மொத்த |
---|---|---|---|---|
1 |
சென்னை |
சென்னை |
71 |
71 |
2 |
கோயம்புத்தூர் |
கோயம்புத்தூர் |
29 |
38 |
திருப்பூர் |
9 |
|||
3 |
கடலூர் |
கடலூர் |
32 |
32 |
4 |
தருமபுரி |
தருமபுரி |
21 |
43 |
கிருஷ்ணகிரி |
22 |
|||
5 |
திண்டுக்கல் |
திண்டுக்கல் |
34 |
34 |
6 |
ஈரோடு |
ஈரோடு |
27 |
35 |
திருப்பூர் |
8 |
|||
7 |
காஞ்சிபுரம் |
காஞ்சிபுரம் |
9 |
52 |
செங்கல்பட்டு |
20 |
|||
திருவள்ளூர் |
23 |
|||
8 |
கன்னியாகுமரி |
கன்னியாகுமரி |
25 |
25 |
9 |
கும்பகோணம் |
நாகப்பட்டிணம் |
9 |
44 |
மயிலாடுதுறை |
11 |
|||
தஞ்சாவூர் |
13 |
|||
திருவாரூர் |
11 |
|||
10 |
மதுரை |
மதுரை |
34 |
44 |
தேனி |
10 |
|||
11 |
நீலகிரி |
நீலகிரி |
22 |
22 |
12 |
புதுக்கோட்டை |
புதுக்கோட்டை |
26 |
26 |
13 |
இராமநாதபுரம் |
இராமநாதபுரம் |
32 |
32 |
14 |
சேலம் |
சேலம் |
45 |
74 |
நாமக்கல் |
29 |
|||
15 |
சிவகங்கை |
சிவகங்கை |
32 |
32 |
16 |
தஞ்சாவூர் |
தஞ்சாவூர் |
25 |
30 |
திருவாரூர் |
5 |
|||
17 |
தூத்துக்குடி |
தூத்துக்குடி |
25 |
25 |
18 |
திருச்சிராப்பள்ளி |
அரியலூர் |
9 |
75 |
கரூர் |
16 |
|||
பெரம்பலூர் |
10 |
|||
திருச்சிராப்பள்ளி |
40 |
|||
19 |
திருநெல்வேலி |
திருநெல்வேலி |
17 |
33 |
தென்காசி |
16 |
|||
20 |
திருவண்ணாமலை |
திருவண்ணாமலை |
34 |
34 |
21 |
வேலூர் |
வேலூர் |
17 |
42 |
இராணிப்பேட்டை |
12 |
|||
திருப்பத்தூர் |
13 |
|||
22 |
விழுப்புரம் |
விழுப்புரம் |
17 |
27 |
கள்ளக்குறிச்சி |
10 |
|||
23 |
விருதுநகர் |
விருதுநகர் |
38 |
38 |
மொத்தம் |
908 |
908 |
மத்தியக் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் நடப்பாண்டு இலாபத்தில் செயல்பட்டு வருகின்றன. மேலும், 23 மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியிடம் வங்கியியல் உரிமம் பெற்றுள்ளன
மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் பின்வருமாறு:
தொகை (ரூ.கோடியில்)வ.எண் |
விவரம் |
வைப்புகள் |
பெறப்பட்ட கடன்கள் |
---|---|---|---|
1 | 2018-19 | 28,792.35 | 6,324.87 |
2 | 2019-20 | 30,316.00 | 8,478.87 |
3 | 2020-21 | 31,927.28 | 6,729.60 |
4 | 2021-22 | 35,759.06 | 12,354.48 |
5 | 2022-2023 | 38,166.54 | 14233.98 |
மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நவீன வங்கியியல் சேவைகள்:
தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியானது, 1905 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் இணையமாக செயல்படுகிறது. இவ்வங்கி பொது மக்களிடமிருந்து பெறும் வைப்பு நிதி, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிடம் பெறும் மறுநிதி உதவி ஆகியவற்றின் மூலம் நிதியாதாரங்களைத் திரட்டி வருகிறது. தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி குறுகிய காலக் கடன் அமைப்பின் மையமாக உள்ளது. மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் கடன் தேவைகளுக்கு நிதியுதவி அளிக்கிறது. இவ்வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள கூட்டுறவு வங்கிகளின் மிகை நிதியை கையாள்வதுடன் நிதி மேலாண்மை குறித்த வழிகாட்டுதலையும் அளிக்கிறது. மேலும், சென்னையிலுள்ள 47 கிளைகள் மூலம் பொதுமக்களுக்கு நேரடி வங்கிச் சேவையாற்றி வருகிறது.
வ. எண் |
கிளைகள் |
---|---|
1 | தலைமை அலுவலகம் |
2 | ஆடம்பாக்கம் மேற்கு |
3 | ஆடியார் |
4 | அல்வார்பேட் கிழக்கு |
5 | அண்ணா நகர் |
6 | அண்ணா நகர் விரிவு* |
7 | அண்ணா சாலை |
8 | அசோக் நகர்* |
9 | அயநவரம்* |
10 | பெசாண்ட் நகர்* |
11 | செத்பேட் |
12 | சிந்ததிரிபேட் |
13 | ஈக்மோர் |
14 | ஜவாகர் நகர்* |
15 | கே.கே. நகர் |
16 | கெல்லீஸ் |
17 | கொடம்பாக்கம்* |
18 | கொரத்தூர்* |
19 | கொட்டிவாக்கம் |
20 | கொட்டூர்புரம் |
21 | மண்டவேலி |
22 | மெதானகர் |
23 | மிண்ட் ரோட் |
24 | மோகப்பைர் கிழக்கு* |
25 | மோகப்பைர் மேற்கு* |
26 | மைலாப்பூர் டேங்க் |
27 | நூகம்பாக்கம் |
28 | பெரம்பூர் |
29 | பெரியமேடு |
30 | பொரூர் |
31 | புரசைவால்கம் |
32 | ராயப்பேட்டா |
33 | ராயபுரம் |
34 | சைதாபேட் |
35 | சந்தோம் |
36 | சாஸ்த்ரி நகர்* |
37 | ஷெனாய் நகர் |
38 | தேய்நம்பேட் |
39 | தியாகராய நகர்* |
40 | திருவான்மியூர் |
41 | திரிப்லிக்கேன் |
42 | வளசரவாக்கம் |
43 | வில்லிவாக்கம் |
44 | வேலாச்சேரி |
45 | வாஷ்மேன்பேட் |
46 | மேற்கு மாம்பளம் |
47 | அல்வார்பேட் |
* தானியங்கி பணம் வழங்கும் இயந்திர (ATM) வசதி உள்ளது.
தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியால் நடத்தப்படும் விவசாய கூட்டுறவு பணியாளர் பயிற்சி நிலையத்தின் மூலம் மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கப் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி தொடர்ந்து நிதிநிலையில் வலுவான நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, தொடக்க கூட்டுறவு வளர்ச்சி நிதியினையும் (Primary Cooperative Development Fund),வைப்புத்தொகை உத்தரவாத நிதியினையும் (Deposit Guarantee Fund) பராமரித்து வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகளின் ஒப்பீடு விவரம் பின்வருமாறு. .
தொகை (ரூ.கோடியில்)
வ. எண் |
விவரம் | வைப்புகள் |
பெறப்பட்ட கடன்கள் |
நிகர இலாபம் |
---|---|---|---|---|
1 | 2016-17 | 11240.46 | 2455.26 | 43.70 |
2 | 2017-18 | 8,305.54 | 2,844.19 | 81.83 |
3 | 2018-19 | 8,384.60 | 3,222.90 | 81.87 |
4 | 2019-20 | 11,081.93 | 4,199.40 | 82.15 |
5 | 2020-21 | 10,674.73 | 9,567.30 | 174.16 |
தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியில் வழங்கப்படும் நவீன வங்கியியல் சேவைகள் :
நீண்ட காலக் கூட்டுறவுக் கடன் அமைப்பு வட்ட/வட்டார அளவில் 180 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளையும், மாநில அளவில் தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியையும் உள்ளடக்கியுள்ளது. நீண்ட காலக் கூட்டுறவுக் கடன் அமைப்பு கிராமப்புறங்களிலுள்ள விவசாயிகள் மற்றும் பிறரின் நீண்ட கால கடன் தேவைகளை நிறைவு செய்வதை முதன்மை பணியாக மேற்கொண்டு வருகின்றன
(ரூ. கோடியில்)
ஆண்டு |
நிலையான வைப்புத்தொகை திரட்டப்பட்டது |
நிலையான வைப்பு நிலுவை |
---|---|---|
2016-17 | 174.73 | 171.14 |
2017-18 | 170.48 | 156.97 |
2018-19 | 172.90 | 158.77 |
2019-20 | 173.60 | 162.58 |
2020-21 | 255.99 | 199.04 |
2021-22 | 206.56 | 196.39 |
(ரூ. கோடியில்)
ஆண்டு |
நகைக் கடன் வழங்கப்பட்டது |
நகைக் கடன் நிலுவை |
---|---|---|
2016-17 | 233.78 | 157.58 |
2017-18 | 241.07 | 165.20 |
2018-19 | 278.41 | 189.46 |
2019-20 | 380.49 | 245.51 |
2020-21 | 443.15 | 309.45 |
2021-22 | 293.42 | 263.88 |
(ரூ. கோடியில்)
ஆண்டு |
PCARD வங்கிகளுக்கு நகைக் கடன் மறுநிதியளிப்பு |
நகைக் கடன் நிலுவை |
---|---|---|
2016-17 | 442.56 | 384.34 |
2017-18 | 461.15 | 398.02 |
2018-19 | 191.65 | 427.09 |
2019-20 | 611.46 | 567.35 |
2020-21 | 670.12 | 645.44 |
2021-22 | 470.91 | 484.48 |
(ரூ. கோடியில்)
ஆண்டு |
நிகர லாபம் |
சொந்த நிதி (பங்கு மூலதனம் மற்றும் இலவச இருப்புக்கள்) |
---|---|---|
2016-17 | 8.21 | 99.57 |
2017-18 | 10.44 | 118.93 |
2018-19 | 27.62 | 122.25 |
2019-20 | 34.40 | 123.17 |
2020-21 | 39.48 | 131.40 |
2021-22 | 40.18 | 134.04 |
தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் வட்டார அலுவலகங்கள் மற்றும் விரிவாக்க கவுண்ட்டர் விபரம் கீழ்க்கண்டவாறு
வ.எண் |
விரிவாக்க கவுன்ட்டர்கள் |
|
1 |
ஆழ்வார்ப்பேட்டை - சென்னை |
|
2 |
அடையார் - சென்னை |
|
3 |
பிராட்வே - சென்னை |
|
4 |
சிந்தாமணி - திருச்சிராப்பள்ளி |
|
5 |
காளவாசல்– மதுரை |
|
6 |
பரமக்குடி- இராமநாதபுரம் ( மாவட்டம்) |
வஎண் |
வட்டார அலுவலகங்களின் விவரங்கள் |
|
1 |
கோயம்புத்தூர் |
|
2 |
தருமபுரி |
|
3 |
திண்டுக்கல் |
|
4 |
ஈரோடு |
|
5 |
காஞ்சிபுரம் |
|
6 |
கன்னியாகுமரி |
|
7 |
மதுரை |
|
8 |
புதுக்கோட்டை |
|
9 |
சேலம் |
|
10 |
சிவகங்கை |
|
11 |
தஞ்சாவூர் |
|
12 |
திருவண்ணாமலை |
|
13 |
திருநெல்வேலி |
|
14 |
திருப்பூர் |
|
15 |
திருவாரூர் |
|
16 |
திருச்சிராப்பள்ளி |
|
17 |
வேலூர் |
|
18 |
விழுப்புரம் |
|
19 |
விருதுநகர் |
கடந்த ஐந்தாண்டுகளின் தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் செயல்பாடு பின்வருமாறு.
தொகை (ரூ.கோடியில்)வ.எண் | விவரங்கள் | வைப்புநிதி | கடன் வழங்கியது | நிகர இலாபம் |
---|---|---|---|---|
1 | 2016-17 | 175.72 | 252.05 | 8.21 |
2 | 2017-18 | 158.27 | 241.00 | 10.44 |
3 | 2018-19 | 161.40 | 281.12 | 27.62 |
4 | 2019-20 | 165.68 | 363.11 | 30.77 |
5 | 2020-21 | 291.99 | 1111.69 | 40.45 |
மாநிலத்தில் 180 தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளின் முதன்மை பணியான சிறு பாசனம், நில மேம்பாடு, பண்ணை இயந்திரமயமாக்கல், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு மற்றும் இதர பணிகளுக்கு நீண்ட காலக் கடன்கள் வழங்குவது இவற்றின் தலையாய பணியாகும். தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிடமிருந்து மறுநிதியுதவி கிடைக்கப் பெறாத நிலையில், இவ்வங்கிகள் தங்களிடம் உள்ள நிதியிலிருந்து தற்போது நகைக்கடன்கள் மட்டுமே வழங்கி வருகின்றன
மாநில வாரியான தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் விவரம் பின்வருமாறு
வ.எண் |
மாவட்டதின் பெயர் |
வங்கிகளின் எண்ணிக்கை |
---|---|---|
1 | கோயம்புத்தூர் | 9 |
2 | கடலூர் | 6 |
3 | தருமபுரி | 2 |
4 | திண்டுக்கல் | 6 |
5 | ஈரோடு | 7 |
6 | காஞ்சிபுரம் | 3 |
7 | செங்கல்பட்டு | 2 |
8 | கன்னியாகுமரி | 5 |
9 | கரூர் | 3 |
10 | கிருஷ்ணகிரி | 3 |
11 | மதுரை | 7 |
12 | நாகப்பட்டினம் | 1 |
13 | நாமக்கல் | 7 |
14 | நீலகிரி | 4 |
15 | பெரம்பலூர் | 1 |
16 | புதுக்கோட்டை | 9 |
17 | இராமநாதபுரம் | 4 |
18 | சேலம் | 6 |
19 | சிவகங்கை | 6 |
20 | தஞ்சாவூர் | 8 |
21 | தேனி | 4 |
22 | திருநெல்வேலி | 4 |
23 | தென்காசி | 4 |
24 | திருவள்ளூர் | 10 |
25 | திருவண்ணாமலை | 8 |
26 | திருவாரூர் | 6 |
27 | தூத்துக்குடி | 3 |
28 | திருச்சிராப்பள்ளி | 5 |
29 | திருப்பூர் | 9 |
30 | வேலூர் | 3 |
31 | ராணிப்பேட்டை | 3 |
32 | திருப்பத்தூர் | 3 |
33 | விழுப்புரம் | 6 |
34 | கள்ளக்குறிச்சி | 4 |
35 | விருதுநகர் | 5 |
36 | அரியலூர் | 2 |
37 | மயிலாடுதுறை | 2 |
Total | 180 |
தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் கடந்த ஐந்தாண்டுகளின் செயல்பாடுகள் பின்வருமாறு
தொகை (ரூ.கோடியில்)
வ.எண் |
விவரங்கள் |
வைப்புநிதி |
கடன் வழங்கியது |
---|---|---|---|
1 | 2016-17 | 39.85 | 884.83 |
2 | 2017-18 | 38.44 | 986.77 |
3 | 2018-19 | 40.60 | 1074.40 |
4 | 2019-20 | 50.35 | 1365.34 |
5 | 2020-21 | 88.06 | 1425.65 |
மாநிலத்தில் நகரக் கூட்டுறவு கடன் அமைப்பு மாநில அளவில் தமிழ்நாடு நகரக் கூட்டுறவு வங்கிகளின் இணையத்தையும், நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்படும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களையும் உள்ளடக்கியுள்ளது. இந்நிறுவனங்கள் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வங்கித் தேவைகளை நிறைவு செய்து வருகின்றன
மாநிலத்தில் நகர கூட்டுறவுக் கடன் இயக்கத்தின் வளர்ச்சியினை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு தமிழ்நாடு நகர கூட்டுறவு வங்கிகளின் இணையம் செயல்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு நகர கூட்டுறவு வங்கிகளின் இணையம் நகரக் கூட்டுறவு வங்கிகளுக்கு நிர்வாகம், பணியாளர்களுக்கு பயிற்சியளித்தல் மற்றும் வங்கிகள் நவீன வங்கியியல் தொழில் நுட்பங்களை நடை முறைப்படுத்துதல் போன்றவற்றில் உதவி புரிந்து வருகிறது..
120 நகர கூட்டுறவு வங்கிகள், 7 பணியாளர் கூட்டுறவு வங்கிகள் ஆக மொத்தம் 127 வங்கிகள் இணையத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
சந்தா வசூல்
வருடம் |
தொகை- ரூ. இலட்சத்தில் |
---|---|
2016-17 | 10.21 |
2017-18 | 17.54 |
2018-19 | 19.80 |
2019-20 | 31.89 |
2020-21 | 20.12 |
2021-22 | 9.30 |
2022-23 | 12.45 |
வருடம் |
தொகை- ரூ. இலட்சத்தில் |
---|---|
2016-17 | 103.71 |
2017-18 | 125.85 |
2018-19 | 115.14 |
2019-20 | 208.08 |
2020-21 | 101.35 |
2021-22 | 73.71 |
2022-23 | 100.21 |
வருடம் |
பொது நிதி(ரூ. இலட்சத்தில்) |
நகர வங்கிகள் வளர்ச்சி நிதி(ரூ. இலட்சத்தில்) |
---|---|---|
2016-17 | 197.10 | 543.76 |
2017-18 | 202.16 | 634.39 |
2018-19 | 205.83 | 700.25 |
2019-20 | 225.67 | 767.50 |
2020-21 | 239.80 | 855.24 |
2021-22 | 225.36 | 837.64 |
2022-23((தோராயமாக)) | 258.37 | 869.03 |
மார்ச் 31 தேதியில் |
பொது நிதி |
நகர வங்கிகள் வளர்ச்சி நிதி |
---|---|---|
2017 | 196.57 | 1156.10 |
2018 | 205.27 | 1369.41 |
2019 | 209.11 | 1557.41 |
2020 | 233.63 | 1820.14 |
2021 | 254.88 | 1993.56 |
2022 | 252.22 | 1913.65 |
2023 | 242.11 | 2134.42 |
நகரக் கூட்டுறவு வங்கிகள், நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வங்கிச் சேவைகள் மற்றும் கடன் வசதிகளை அளித்து வருகின்றன. மாநிலத்தில் தற்போது 128 நகர கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வங்கிகள், பொது மக்களிடமிருந்து வைப்புகளைப் பெற்று வீடு கட்டுதல், வணிகம் மற்றும் உறுப்பினர்களின் அவசர மற்றும் சொந்த தேவைகளுக்காக நகைக் கடன் உள்ளிட்ட இதர பண்ணை சாரா காரியங்களுக்காக கடன் வசதிகளை அளித்து வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு நவீன வங்கியியல் சேவையினை அளிப்பதற்காக நகர கூட்டுறவு வங்கிகளில் மைய வங்கியியல் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
வ. எண்.. |
மண்டலத்தின் பெயர் |
நகர கூட்டுறவு வங்கிகளின் எண்ணிக்கை |
கிளைகள் எண்ணிக்கை |
---|---|---|---|
1 | அரியலூர் | 1 | 1 |
2 | செங்கல்பட்டு | 3 | 5 |
3 | சென்னை | 8 | 16 |
4 | கோயம்புத்தூர் | 4 | 16 |
5 | கடலூர் | 3 | 1 |
6 | தருமபுரி | 1 | 1 |
7 | திண்டுக்கல் | 4 | 2 |
8 | ஈரோடு | 5 | 7 |
9 | கள்ளக்குறிச்சி | 1 | 1 |
10 | காஞ்சிபுரம் | 2 | 8 |
11 | கன்னியாகுமரி | 1 | 0 |
12 | கரூர் | 2 | 2 |
13 | கிருஷ்ணகிரி | 2 | 5 |
14 | மதுரை | 5 | 0 |
15 | மயிலாடுதுறை | 2 | 3 |
16 | நாகப்பட்டினம் | 0 | 0 |
17 | நாமக்கல் | 5 | 15 |
18 | நீலகிரி | 3 | 1 |
19 | பெரம்பலூர் | 0 | 0 |
20 | புதுக்கோட்டை | 2 | 2 |
21 | இராமநாதபுரம் | 4 | 1 |
22 | ராணிப்பேட்டை | 4 | 6 |
23 | சேலம் | 8 | 35 |
24 | சிவகங்கை | 2 | 1 |
25 | தென்காசி | 0 | 0 |
26 | தஞ்சாவூர் | 6 | 3 |
27 | தேனி | 2 | 0 |
28 | தூத்துக்குடி | 8 | 22 |
29 | திருச்சிராப்பள்ளி | 9 | 9 |
30 | திருநெல்வேலி | 6 | 8 |
31 | திருப்பத்தூர் | 3 | 5 |
32 | திருப்பூர் | 3 | 3 |
33 | திருவள்ளூர் | 1 | 0 |
34 | திருவண்ணாமலை | 4 | 0 |
35 | திருவாரூர் | 4 | 2 |
36 | வேலூர் | 3 | 2 |
37 | விழுப்புரம் | 2 | 3 |
38 | விருதுநகர் | 5 | 3 |
Total | 128 | 189 |
கடந்த ஐந்தாண்டுகளில் நகரக் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் பின்வருமாறு:
தொகை (ரூ.கோடியில்)வ.எண் |
விவரம் |
வைப்புகள் |
மொத்த கடன் வழங்கியது |
---|---|---|---|
1 | 2016-17 | 8444.31 | 5391.72 |
2 | 2017-18 | 7897.5 | 5577.13 |
3 | 2018-19 | 7847.89 | 5579.64 |
4 | 2019-20 | 7871.72 | 5892.24 |
5 | 2020-21 | 8526.36 | 1519.76 |
6 | 2021-22 | 8848.31 | 1552.88 |
7 | 2022-23 | 8664.29 | 1704.41 |
தமிழ்நாட்டில் இயங்கிவரும் 116 நகரக் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர் மற்றும் புறநகர்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கடன் வழங்கும் பணியினை செய்து வருகின்றன. இச்சங்கங்கள், பொது மக்களிடமிருந்து வைப்புகளைப் பெற்று, சிறு வணிகர்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு, வீட்டுவசதிக் கடன், வணிகக் கடன் மற்றும் இதர பண்ணை சாராக் கடன்களை வழங்கி வருகின்றன
வ.. எண்.. |
மண்டலத்தின் பெயர் |
சங்கங்களின் எண்ணிக்கை |
கிளைகள் எண்ணிக்கை |
1 | சென்னை | 14 | 0 |
2 | அரியலூர் | 0 | 0 |
3 | கோயம்புத்தூர் | 10 | 6 |
4 | கடலூர் | 9 | 0 |
5 | தருமபுரி | 0 | 0 |
6 | திண்டுக்கல் | 3 | 0 |
7 | ஈரோடு | 1 | 0 |
8 | காஞ்சிபுரம் | 7 | 3 |
9 | கன்னியாகுமரி | 3 | 0 |
10 | கரூர் | 0 | 0 |
11 | கிருஷ்ணகிரி | 0 | 0 |
12 | மதுரை | 9 | 1 |
13 | நாகப்பட்டினம் | 2 | 1 |
14 | நாமக்கல் | 1 | 0 |
15 | நீலகிரி | 0 | 0 |
16 | பெரம்பலூர் | 0 | 0 |
17 | புதுக்கோட்டை | 0 | 0 |
18 | இராமநாதபுரம் | 0 | 0 |
19 | சேலம் | 5 | 5 |
20 | சிவகங்கை | 1 | 0 |
21 | தஞ்சாவூர் | 1 | 0 |
22 | தேனி | 2 | 0 |
23 | திருநெல்வேலி | 2 | 0 |
24 | திருவள்ளூர் | 2 | 0 |
25 | திருவண்ணாமலை | 0 | 0 |
26 | திருவாரூர் | 0 | 0 |
27 | தூத்துக்குடி | 4 | 0 |
28 | திருச்சிராப்பள்ளி | 3 | 0 |
29 | திருப்பூர் | 1 | 1 |
30 | வேலூர் | 8 | 1 |
31 | விழுப்புரம் | 1 | 0 |
32 | விருதுநகர் | 3 | 0 |
33 | செங்கல்பட்டு | 11 | 7 |
34 | கள்ளக்குறிச்சி | 2 | 0 |
35 | மயிலாடுதுறை | 0 | 0 |
36 | ராணிப்பேட்டை | 9 | 2 |
37 | தென்காசி | 1 | 0 |
38 | திருப்பத்தூர் | 0 | 0 |
Total | 115 | 27 |
கடந்த ஐந்தாண்டுகளில் நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் செயல்பாடுகள் பின்வருமாறு
S.No |
விவரம் |
வைப்புகள் |
மொத்த கடன் வழங்கியது |
---|---|---|---|
1 | 2016-17 | 1412.12 | 1100.94 |
2 | 2017-18 | 1286.07 | 1208.07 |
3 | 2018-19 | 1338.13 | 1381.39 |
4 | 2019-20 | 1400.79 | 1510.82 |
5 | 2020-21 | 6179.30 | 1640.71 |
6 | 2021-22 | 7258.45 | 1163.12 |
7 | 2022-23 | 7195.23 | 1847.08 |
தமிழ்நாட்டில் 1705 பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் மாநில மற்றும் மத்திய அரசுப் பணியாளர்கள், அரசு சார்ந்த மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் முதன்மை நோக்கங்கள் பணியாளர்களிடையே சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குவதும் நியாயமான வட்டி விகிதத்தில் அவர்களுக்கு கடன்கள் வழங்குவதும் ஆகும்.
வ. எண் |
மாவட்டம் |
சங்கங்களின் எண்ணிக்கை |
கிளைகள் எண்ணிக்கை |
1 | அரியலூர் | 18 | 0 |
2 | சென்னை | 193 | 0 |
3 | கோயம்புத்தூர் | 86 | 0 |
4 | கடலூர் | 76 | 0 |
5 | தருமபுரி | 46 | 0 |
6 | திண்டுக்கல் | 49 | 0 |
7 | ஈரோடு | 49 | 0 |
8 | காஞ்சிபுரம் | 21 | 0 |
9 | செங்கல்பட்டு | 34 | 0 |
10 | கன்னியாகுமரி | 40 | 0 |
11 | கரூர் | 19 | 0 |
12 | கிருஷ்ணகிரி | 37 | 0 |
13 | மதுரை | 91 | 0 |
14 | நாகப்பட்டினம் | 13 | 0 |
15 | நாமக்கல் | 28 | 0 |
16 | நீலகிரி | 38 | 13 |
17 | பெரம்பலூர் | 10 | 0 |
18 | புதுக்கோட்டை | 37 | 0 |
19 | இராமநாதபுரம் | 34 | 0 |
20 | சேலம் | 97 | 0 |
21 | சிவகங்கை | 55 | 0 |
22 | தஞ்சாவூர் | 53 | 0 |
23 | தேனி | 15 | 1 |
24 | திருநெல்வேலி | 52 | 0 |
25 | தென்காசி | 16 | 0 |
26 | திருவள்ளூர் | 58 | 0 |
27 | திருவண்ணாமலை | 43 | 0 |
28 | திருவாரூர் | 30 | 0 |
29 | தூத்துக்குடி | 55 | 0 |
30 | திருச்சிராப்பள்ளி | 89 | 0 |
31 | திருப்பூர் | 24 | 0 |
32 | வேலூர் | 32 | 0 |
33 | திருப்பத்தூர் | 19 | 0 |
34 | ராணிப்பேட்டை | 17 | 0 |
35 | விழுப்புரம் | 44 | 0 |
36 | கள்ளக்குறிச்சி | 17 | 0 |
37 | விருதுநகர் | 54 | 0 |
Total | 1689 | 14 |
பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் மூலம் கடந்த ஐந்தாண்டுகளில் வழங்கப்பட்ட கடன்கள் விவரம் பின்வருமாறு:-
(ரூ. கோடியில்)