விற்பனை திட்டம் மற்றும் வளர்ச்சி பிரிவு

விற்பனை திட்டம் மற்றும் வளர்ச்சி

II. தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம்

அறிமுகம்

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (டான்பெட்) தனது வியாபார நடவடிக்கைகளை 20.02.1959-இல் துவக்கியது. இதனுடைய விவகார எல்லையாக தஞ்சாவூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் உள்ளது.

1.நோக்கம்
  • விவசாயிகளுக்கு தேவையான விவசாய இடுபொருட்களை அறிந்து அவற்றினை சேமித்து உரங்கள், விதைகள், பூச்சி மருந்துகள் மற்றும் வேளாண் உபகரணங்களை கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலமாக விநியோகம் செய்வது.
  • தனது இணைப்பு சங்கங்களான வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் கொள்முதல் செய்து, சேமித்து விற்பனை செய்யும் விவசாய விளைப்பொருட்களுக்கு சந்தையினை ஏற்படுத்துதல்.
  • வேளாண் உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கான சேமிப்பு வசதிகளையும் எளிதில் தரம் குறையக்கூடிய வேளாண் பொருட்களை குளிர்பதன கிடங்குகளில் சேமிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்.
  • வேளாண் இடுபொருட்களான கலப்புரங்கள், குருணை வடிவிலான கலப்புரங்கள் மற்றும் விதைகள் ஆகியனவற்றை உற்பத்தி செய்தல்.
2. நிர்வாக அமைப்பு
  • மாவட்ட அளவில் 18 மண்டல அலுவலகங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளது..
  • தலைமை அலுவலக அளவில் நிர்வாகம், கணக்கு, உட்தணிக்கை, உரம், விதை மற்றும் பூச்சி மருந்துகள், வேளாண் விளைப்பொருள் விற்பனை மற்றும் கட்டிட பிரிவுகள் அமைந்துள்ளன.
  • டான்பெட் நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவினால் மேற்கொள்ளப்படுகிறது. கூடுதல் பதிவாளர் நிலையிலுள்ள மேலாண்மை இயக்குநர் அரசால் நியமிக்கப்படுகிறார்.
  • உர விற்பனை மற்றும் வேளாண் விளைப்பொருள் விற்பனைப் பிரிவுகள் அரசால் நியமிக்கப்படும் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் நிலையிலுள்ள பொது மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. நிர்வாகம் மற்றும் உட்தணிக்கை பிரிவுகள் துணைப்பதிவாளர் நிலையிலுள்ள அலுவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
3. உறுப்பினர்கள்

இதன் உறுப்பினர்களாவன:-

  1. தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் நீங்கலாக உள்ள மாவட்டங்களில் அமைந்துள்ள தாலூக்கா அளவிலான வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள்.
  2. தஞ்சாவூர் விற்பனை கூட்டுறவு விற்பனை இணையம், திருவாரூர்.
  3. தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம்.
  4. தமிழ்நாடு அரசு.
4. அங்கீகரிக்கப்பட்ட மற்றும் செலுத்தப்பட்ட மூலதனம்.

ஓவ்வொரு பங்கும் ரூ.500 வீதம் ஒரு லட்சம் பங்குகள் என்ற அளவில் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.5.00 கோடியாகும். இவற்றில் 31.03.2019 ல் உள்ள செலுத்தப்பட்ட மூலதன விவரம் பின்வருமாறு.:-

(ரூ. இலட்சத்தில்)

வ.எண்.

உறுப்பினரின் பெயர்

உறுப்பினர்களின் எண்ணிக்கை

செலுத்தப்பட்ட மூலதனம்

1

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள்

115

79.75

2

தஞ்சாவூர் விற்பனை கூட்டுறவு விற்பனை இணையம், திருவாரூர்.

1

0.10

3

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம்.

1

0.10

4

தமிழ்நாடு அரசு.

1

62.92

கூடுதல்

118

142.87

5.செயல்பாடுகள்
(i).உர விநியோகம்
  • • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களால் அளிக்கப்படுகின்ற பயிர்கடனில் ரொக்கப் பகுதி மற்றும் பொருட் பகுதி ஆகியன அடங்கியுள்ளன. பொருட் பகுதியில் உள்ள உரங்கள், பூச்சி மருந்துகள், விதைகள் மற்றும் வேளாண் உபகரணங்கள் ஆகியனவற்றை தமிழ் நாடு கூட்டுறவு விற்பனை இணையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கங்கள் மூலம் விநியோகிக்கிறது.
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அளிக்கப்படும் உரங்களை டான்பெட் நிறுவனம் முன்னணி உற்பத்தியாளர்களாகவுள்ள திருவாளர்கள். இப்கோ, கிரிப்கோ, ஐ.பி.எல், கோரமண்டல், பாக்ட், ஆர்.சி.எப், ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் போன்ற நிறுவனங்களிலிருந்து டான்பெட் கொள்முதல் செய்து விநியோகிக்கிறது.
  • ஒவ்வொரு மாதத்திற்கும், இந்திய அரசின் உரங்களின் இயக்ககம் உரங்களுக்கான ஒதுக்கீடுகளை பல்வேறு உர வகைகளுக்கென உரங்களின் உற்பத்தியாளர்களுக்கு மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அளிக்கிறது. இதன் அடிப்படையில் வேளாண் துறை ஆணையர், மாவட்ட வாரியான ஒதுக்கீடுகளை அளிக்கின்றார்கள். டான்பெட் மேற்குறிப்பிட்ட ஒதுக்கீடுகள் அடிப்படையில் கொள்முதல் ஆணைகள் அளித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உரங்களை விநியோகிக்கிறது.
(ii).உர உற்பத்தி
  • • டான்பெட் நிறுவனம் நுண்ணூட்டச்சத்து கலப்பு உரம் மற்றும் சமர்ச்சீர் விகிதத்திலுள்ள பாமணி 17:17:17 என்ற குருணை வடிவிலான கலப்புரத்தினை வேப்பம் புண்ணாக்கு கலந்து உற்பத்தி செய்கிறது
  • • இந்த உற்பத்தி ஆலை ஏப்ரல் 1971 ஆம் ஆண்டில் 30,000 மெ.டன்கள் ஆண்டு உற்பத்தி திறனுடன் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள பாமணி கிராமத்தில் அமைந்துள்ளது
  • • திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில், 1000 மெ.டன் ஆண்டு உற்பத்தி திறனுடன் நுண் உர கலவை உற்பத்தி அலகு மற்றும் 50000 லிட்டர் ஆண்டு உற்பத்தி திறனுடன் உயிரி உரம் மற்றும் உயிரி பூச்சிக்கொல்லி உற்பத்தி அலகு செயல்பட்டு வருகிறது
• பாமணி உரத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை
(iii).டான்பெட் கலப்புரங்கள் 
  • கலப்புரங்கள் திருச்சி, மதுரை மற்றும் வேலூரில் உற்பத்தி செய்யப்படுகிறது
(iv). பூச்சி கொல்லி மருந்துகள், விதைகள் மற்றும் வேளாண் உபகரணங்கள் விநியோகம்
  • டான்பெட் பூச்சி கொல்லி மருந்துகள், விதைகள் மற்றும் வேளாண் உபகரணங்கள் ஆகியனவற்றை முன்னணி உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக மாவட்ட அளவில் விநியோகிக்கிறது .  
  • மன்னார்குடியில் 1980 ல் நிறுவப்பட்ட விதை பதப்படுத்தும் நிலையத்தின் மூலமாக ஆண்டிற்கு 300 மெ.டன்கள் நெல் விதைகளை பதப்படுத்தி விவசாயிகளுக்கு விநியோகிக்கிறது

    பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் விதைகளின் விநியோகம்.

(v).வேளாண் விளைப்பொருள்கள் சந்தையிடுதல்
  • சந்தைப்படுத்தும் நிறுவனமான டான்பெட் வேளாண் விளைப்பொருட்களான பருத்தி, மிளகாய், தனியா, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகளை கொள்முதல் செய்கிறது
  • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் ஆகியவற்றில் விவசாயிகளுக்கு நல்ல விலை அளித்து கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
  • இப்கோ தொலைதொடர்பு நிறுவனத்தின் தொலை தொடர்பு பொருட்களை விநியோகிப்பதில் டான்பெட் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது
(vi).மாட்டுத் தீவண விற்பனை
  • டான்பெட் மாட்டுத் தீவன விற்பனையினை 2011 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது. மாட்டுத் தீவன தேவை குறித்து பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் அளிக்கின்ற தேவைப் பட்டியல்கள் அடிப்படையில் மாட்டுத் தீவனம் இந்தியன் பொட்டாஷ் நிறுவனத்திலிருந்து பெறப்பட்டு நேரடியாக விநியோகிக்கப்படுகிறது.
(vii). குளிர் பதனக் கிடங்குகள்
  • இரண்டு குளிர் பதனக் கிடங்குகள் எளிதில் அழுகும் தன்மையுள்ள பொருட்களான காய்கறிகள், பழங்கள் போன்ற பொருட்களை வியாபாரிகள் சேமித்து பயன்பெறும் வகையில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு சேமிப்பு பகுதிகள் மாத வாடகை அடிப்படையில் சேமிப்பதற்காக அளிக்கப்படுகிறது.
  • (1) பேசின் பிரிட்ஜ்பேசின் பிரிட்ஜ், சென்னை குளிர் பதன கிடங்கு 625 மெ.டன்கள் கொள்திறன் கொண்டதாக 1973 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது
  • (2) கோயம்பேடு குளிர் பதன கிடங்கு, சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடி தேவைக்காக 2,500 மெ.டன்கள் கொள்திறன் கொண்டதாக 1995 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
(viii). சேமிப்புகள்
  • வேளாண் இடுபொருட்களின் சேமிப்புக்காக டான்பெட் 36140 மெ.டன்கள் கொள்ளளவு கொண்ட 46 கிடங்குகளை பல்வேறு இடங்களில் நிறுவியுள்ளது. சொந்த கிடங்குகள் தவிர 8270 மெ.டன்கள் கொள்ளளவு கொண்ட 11 வாடகை கிடங்குகளையும் அமைத்து இடுபொருள் போக்குவரத்து செலவினம் குறைக்கும் பொருட்டு டான்பெட் அமர்த்தியுள்ளது
(ix). மண்ணெண்ணெய் விநியோகம்
  • டான்பெட் மண்ணெண்ணெய் மொத்த விநியோகத்திற்காக 15 கிலோ லிட்டர் சேமிப்பு திறன் கொண்ட மண்ணெண்ணெய் விநியோக மையத்தை சென்னை கோடம்பாக்கத்தில் 1969-ல் நிறுவி செயல்படுத்தி வருகிறது. .
  • மொத்த விற்பனை தவிர பொது விநியோக திட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் சில்லறை விநியோக பயன்பாட்டிற்காக சென்னை கோடம்பாக்கம், மன்னார்குடி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் அமைத்துள்ளது.
  • சில்லறை விற்பனை மையங்களில் மாதந்தோறும் 33,000 லிட்டர் மண்ணெண்ணெய், குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
  • மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை தொடர்பான ஒதுக்கீடுகளை பொது விநியோகத்திட்ட துறை மேற்கொள்வதன் அடிப்படையில் மண்ணெண்ணெய் கொள்முதல் இந்தியன் ஆயில் நிறுவனத்திடமிருந்து மேற்கொள்ளப்படுகிறது
(x). பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம்

சென்னை, கோடம்பாக்கம் பெட்ரோல் விநியோக மையம் 19.06.2013-லும், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியிலுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விநியோக மையம் 18.09.2013 லும் துவக்கப்பட்டது.