விற்பனை திட்டம் மற்றும் வளர்ச்சி பிரிவு

விற்பனை திட்டம் மற்றும் வளர்ச்சி

6.கூட்டுறவு அச்சகங்கள்

அமைப்பு:-
  • தமிழ்நாட்டில் 26 கூட்டுறவு அச்சகங்கள் செயல்பட்டு வருகின்றன.
  • மொத்த உறுப்பினர்கள் - 11,797
  • பங்குத் தொகை மூலதனம் - ரூ.2.70 கோடி.
நோக்கம்:-
  • கூட்டுறவு நிறுவனங்களின் அச்சுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் கூட்டுறவு அச்சகங்கள் தோற்றுவிக்கப்பட்டன
  • கூட்டுறவு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்குத் தேவையான அச்சுப்பணி மற்றும் பைண்டிங் பணிகளை மேற்கொள்ளுதல் கூட்டுறவு அச்சகங்களின் பிரதான நோக்கமாகும்
சேவைகள்:-
  • கூட்டுறவு அச்சகங்கள் தமது நிர்வாக எல்லைக்குள் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள், அரசு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களின் அச்சுத் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன.
  • பிரதான அச்சு வேலையாக இரசீது படிவங்கள், பில் புத்தகங்கள், பேரேடுகள், நாட்காட்டிகள் மற்றும் நாட்குறிப்புகள், அச்சிடுதல் மற்றும் பைண்டிங் செய்தல் போன்ற பணிகளை கூட்டுறவு அச்சகங்கள் செய்து வருகின்றன.
கூட்டுறவு அச்சகங்களின் பெயர் மற்றும் முகவரி

வ.எண்

பெயர் மற்றும் முகவரி

தொலைபேசி எண்கள்

எஸ்ட்டிடி கோடு

தொலைபேசி எண்கள்

1.

தலைவர்,
சென்னை கூட்டுறவு அச்சகம் லிட், 83 & 95 அண்ணாசாலை, சென்னை-600 002.

044

28521869

2

தலைவர்,
திருவள்ளூர் மாவட்டக் கூட்டுறவு அச்சகம் லிட். 33, கம்பர் தெரு, திருவள்ளூர் -602 001.

044

27645428

3

தலைவர்,
வேலூர் மாவட்டக் கூட்டுறவு அச்சகம் லிட். வேலூர்-632 001.

0416

2220327

4

தலைவர்,
காஞ்சிபுரம் மாவட்ட க் கூட்டுறவு அச்சகம் லிட். 6, வந்தவாசி ரோடு, (கலெக்டரேட் எதிரில்) காஞ்சிபுரம் - 631 504.

044

27237158

5

தலைவர்,
திருவண்ணாமலை மாவட்டக் கூட்டுறவு அச்சகம் லிட். 29, முதல் குறுக்கு தெரு,
திருவண்ணாமலை-606 602.

04175

75227421

6

தலைவர்,
தருமபுரி கூட்டுறவு அச்சகம் லிட். 84, இன்டஸ்டிரியல் பார்க் , தர்மபுரி-5.

04342

230772

7

தலைவர்,
விழுப்புரம் கூட்டுறவு அச்சகம் லிட், 389 B, திருச்சி மெயின் ரோடு, வழுதரெட்டி, விழுப்புரம் - 605 401

04146

259401

8

தலைவர்,
கடலூர் கூட்டுறவு அச்சகம் லிட். நு-2130, இம்பிரியல் ரோடு, கடலூர் - 607 002.

0414

2224329

9

தலைவர்,
சேலம் மாவட்ட கூட்டுறவு அச்சகம் லிட். சூடி.8, சங்கராலயம் சாலை சேலம்-1.

0427

2263537

10

தலைவர்,
ஈரோடு மாவட்டக் கூட்டுறவு அச்சகம் லிட். வீட்டு வசதி வாரிய காலனி, (தலைமை அஞ்சலகம் பின் புறம்) பெரியார் நகர், ஈரோடு மாவட்டம் – 638 001

0424

2252119

11

தலைவர்,
நீலகிரி கூட்டுறவு அச்சகம் லிட். சாரிங் கிராஸ், உதகமண்டலம் - 643 001.

0423

2444058

12

தலைவர்,
கோயம்புத்தூர் கூட்டுறவு அச்சகம் லிட். 1545, திருச்சிராப்பள்ளி சாலை, கோயம்புத்தூர் - 641 018.

0422

2302889

13

தலைவர்,
நாமக்கல் மாவட்டக் கூட்டுறவு அச்சகம் லிட்.
104, புது பேலஸ் வளாகம், துறையூர் ரோடு,
நாமக்கல்- 637 001.

04342

230772

14

தலைவர்,
பெரம்பலூர் மாவட்டக் கூட்டுறவு அச்சகம் லிட்.
5, கே.ஆர், வளாகம் துறைமங்கலம் போஸ்ட்
பெரம்பலூர் - 621 220.

04328

224984

15

தலைவர்,
கரூர் மாவட்டக் கூட்டுறவு அச்சகம் லிட்.
62, புது தெரு, சின்னப்பள்ளி தெரு, கரூர் - 639 001.

04324

239659

16

தலைவர்,
திருச்சி கூட்டுறவு அச்சகம் லிட். நெ.9, சிட்கோ எஸ்டேட், துவாக்குடி, திருச்சிராப்பள்ளி - 620 015.

0431

2791084

17

தலைவர்,,

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு அச்சகம் லிட்.,

35-பி, பாண்டியன் நகர்,

மெடிகல் காலேஜ் ரோடு,

 (மங்கலாபுரம் பேருந்து நிறுத்தம்)

தஞ்சாவூர்-613 007.

04362

237515

18

தலைவர்,
புதுக்கோட்டை கூட்டுறவு அச்சகம் லிட்.
12-14, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், மச்சுவாடி, புதுக்கோட்டை -622 004

04322

270820

19

தலைவர்,
திண்டுக்கல் மாவட்டக் கூட்டுறவு அச்சகம் லிட்.
15, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட்,
திண்டுக்கல்- 624 003.

0451

2471653

20

தலைவர்,
மதுரை கூட்டுறவு அச்சகம் லிட்.
15, திருப்பரங்குன்றம் ரோடு, ஆண்டாள்புரம்,
மதுரை - 625 003.

0452

2374169

21

தலைவர்,
மதுரை காமராஜர் பல்கலைக் கழக கூட்டுறவு அச்சகம் லிட். பல்கலை நகர், மதுரை-625 021.

0452

2458679

22

தலைவர்,
இராமநாதபுரம் மாவட்டக் கூட்டுறவு அச்சகம் லிட். தேவகோட்டை ரோடு, இண்டஸ்டிரியல் எஸ்டேட் காரைக்குடி - 630 005 சிவகங்கை மாவட்டம்.

04565

220211

23

தலைவர்,
விருதுநகர் மாவட்டக் கூட்டுறவு அச்சகம் லிட். சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், சூளைக்கரை, விருதுநகர் – 626 103

04562

252330

24

தலைவர்,
தூத்துக்குடி மாவட்டக் கூட்டுறவு அச்சகம் லிட். 109/5-பி, எட்டையபுரம் ரோடு, தூத்துக்குடி - 628 002.

0461

2334260

25

தலைவர்,
திருநெல்வேலி கூட்டுறவு அச்சகம் லிட்.
1, ரெயில்வே பிடர் ரோடு திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி -627 006.

0462

-

26

தலைவர்,
கன்னியாகுமரி மாவட்டக் கூட்டுறவு அச்சகம் லிட். மேட்டுக்கடை, தக்கலை -629 175
கன்னியாகுமரி மாவட்டம்.

04651

250752

ஊரக பகுதியில் கிடங்குகள்

அறுவடைக் காலங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை சேதாரமின்றி பாதுகாத்து அதிக விலை கிடைக்கும் நேரங்களில் அதனை விற்பனை செய்ய உதவும் வகையில், தமிழக அரசு கிராமப் பகுதிகளில் தான்ய சேமிப்பு வசதியை மேம்படுத்தியுள்ளது. 2011-2015-ஆம் ஆண்டுகளில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் தேசிய வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கியின்(NABARD) ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி(RIDF) மற்றும் கிடங்கு உட்கட்டமைப்பு நிதியின் (WIF)கீழ் ரூ.489.63 கோடி மதிப்பீட்டில் 5,10,600 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3879 கிடங்குகள் கட்டப்பட்டுள்ளது.

நிதி ஆதாரம்

ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி மற்றும் கிடங்கு உட்கட்டமைப்பு நிதியின் கீழ் கிடங்குகள் கட்ட கீழ்கண்ட விவரப்படி நிதி வழங்கப்பட்டுள்ளது.

1.

நபார்டு வங்கியினால் அரசுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி

கிடங்கு கட்டுமானம் மொத்த மதிப்பீட்டு செலவில் 95 சதவீதம் கடனாக அரசுக்கு நபார்டு வழங்கியுள்ளது. மீதமுள்ள 5 சதவீதம் அரசு வழங்கியுள்ளது.

2.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க கிடங்கு கட்டுமானத்திற்கான நிதி

திட்ட மதிப்பீடு முழுவதும், 100 சதவீதம் அரசு மான்யமாக வழங்கியுள்ளது.

3.

வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கிடங்கு கட்டுமானத்திற்கான நிதி

திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் அரசு மான்யமாக வழங்கியுள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் நிதி தொடர்புடைய சங்கத்தின் சொந்த நிதியாகும்.

தான்ய ஈட்டுக்கடன்

அறுவடை காலங்களில் வேளாண் விளைபொருட்களை குறைந்த விலையில் விவசாயிகள் விற்பனை செய்வதை தவிர்த்து தான்ய சேமிப்பு கிடங்குகளில் வேளாண் விளைப்பொருட்களை சேமித்து தான்ய ஈட்டுக் கடன் பெறவும் சரியான நேரத்தில் நல்ல விலைக்கு விற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கிடங்குகளின் பயன்பாடு
  • மார்ச் 2021 வரையிலான காலத்தில் சங்கங்களில் தான்ய சேமிப்பு கிடங்குகளில் தான்யங்களை ஈடாக வைத்து 80087 விவசாயிகள் ரூ.1527.42 கோடி தான்ய ஈட்டுக் கடன் பெற்று பலனடைந்துள்ளனர். இதன் மூலம் தொடர்புடைய சங்கங்கள் ரூ.54.31 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
  • மேலும் 26318 விவசாயிகள் ரூ.761.87 கோடி மதிப்புள்ள விவசாய விளை பொருட்களை வாடகைக்கு வைத்து பயனடைந்துள்ளனர்.

சேமிப்பு கிடங்கு மேம்பாடு மற்றும் வளர்ச்சி ஒழுங்குமுறை ஆணையம்
  • கிடங்குகளில் நேர்மறை நிகர மதிப்பு உள்ள சங்கங்கள் சேமிப்பு கிடங்கு மேம்பாடு மற்றும் வளர்ச்சி ஒழுங்குமுறை ஆணையத்திடம் (WDRA) பதிவு செய்யப்படுகிறது.
  • மார்ச் 2021 வரை 943 சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • சேமிப்பு கிடங்கு மேம்பாடு மற்றும் வளர்ச்சி ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ள சங்கங்கள் மட்டுமே குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு தான்ய ஈட்டுக் 7 சதவீதம் வட்டியில் கடன் வழங்கிட இயலும்.