வ.எண் |
மண்டலத்தின் பெயர்/ கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி |
தொலைபேசி எண் |
திருவள்ளூர் மண்டலம் |
||
1 |
மேலாண்மை இயக்குநர், |
044-26418214 |
2 |
மேலாண்மை இயக்குநர், |
044-27880070 |
3 |
மேலாண்மை இயக்குநர், |
044-27660278 |
வேலூர் மண்டலம் |
||
4 |
மேலாண்மை இயக்குநர், |
0416-2243342 |
5 |
மேலாண்மை இயக்குநர், குடியாத்தம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், ஆர்.எஸ்.ரோடு, டி.என்.சி.எஸ்.சி. கிடங்கு வளாகம், செதுக்கரை, குடியாத்தம் - 632 601 |
04171-220152 |
காஞ்சிபுரம் மண்டலம் |
||
6 |
மேலாண்மை இயக்குநர், ஸ்ரீபெரும்புதூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், எண் - 1/49 காமராஜர் சாலை, நசரத்பேட்டை, பூந்தமல்லி, சென்னை - 600 123 |
044-26272032 |
திருவண்ணாமலை மண்டலம் |
||
7 |
மேலாண்மை இயக்குநர், |
04175-232356 |
8 |
மேலாண்மை இயக்குநர், |
04181-222067 |
9 |
மேலாண்மை இயக்குநர், |
04188-222740 |
10 |
மேலாண்மை இயக்குநர், |
04173-225071 |
11 |
மேலாண்மை இயக்குநர், |
04183-227153 |
12 |
மேலாண்மை இயக்குநர், |
04182-224957 |
13 |
மேலாண்மை இயக்குநர், |
7338749517 |
கிருஷ்ணகிரி மண்டலம் |
||
14 |
மேலாண்மை இயக்குநர், |
04343 - 236024 |
15 |
மேலாண்மை இயக்குநர், |
04343-250034 |
16 |
மேலாண்மை இயக்குநர், |
04347-232227 |
17 |
மேலாண்மை இயக்குநர், |
04341-220029 |
தருமபுரி மண்டலம் |
||
18 |
மேலாண்மை இயக்குநர், |
04346-222028 |
19 |
மேலாண்மை இயக்குநர், |
9994305009 |
விழுப்புரம் மண்டலம் |
||
20 |
மேலாண்மை இயக்குநர், |
04146-240718 |
21 |
மேலாண்மை இயக்குநர், |
04147-222767 |
22 |
மேலாண்மை இயக்குநர், |
04145-222064 |
23 |
திருவெண்ணெய் நல்லூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், |
04153-234569 |
கடலூர் மண்டலம் |
||
24 |
மேலாண்மை இயக்குநர், |
04142-290186 |
25 |
மேலாண்மை இயக்குநர், |
04142-242038 |
26 |
மேலாண்மை இயக்குநர், |
8754834355 |
27 |
மேலாண்மை இயக்குநர், |
04144-238342 |
சேலம் மண்டலம் |
||
28 |
மேலாண்மை இயக்குநர், |
04282-240992, 241393 |
29 |
மேலாண்மை இயக்குநர், |
0427 – 2350119, 2350173 |
30 |
மேலாண்மை இயக்குநர், கொளத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், சிங்கிரிப்பட்டி ஊராட்சி, ஐயம்புதூர், கொளத்தூர் அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் – 636 303 |
|
ஈரோடு மண்டலம் |
||
31 |
மேலாண்மை இயக்குநர், |
0424 – 2211129 |
32 |
மேலாண்மை இயக்குநர், |
04294-220524 |
33 |
மேலாண்மை இயக்குநர், |
04285-222017 |
34 |
மேலாண்மை இயக்குநர், |
04256-233027 |
35 |
மேலாண்மை இயக்குநர், |
04295-220384 |
நீலகிரி மண்டலம் |
||
36 |
மேலாண்மை இயக்குநர், |
0423-2443028 |
கோயம்புத்தூர் மண்டலம் |
||
37 |
மேலாண்மை இயக்குநர், |
04254 - 222138 |
38 |
மேலாண்மை இயக்குநர், |
04254-272393 |
39 |
மேலாண்மை இயக்குநர், |
04259-224983 |
40 |
மேலாண்மை இயக்குநர், |
0422-2687237 |
41 |
மேலாண்மை இயக்குநர், |
0422-2341626, 2341755 |
திருப்பூர் மண்டலம் |
||
42 |
மேலாண்மை இயக்குநர், |
04296-273247 |
43 |
மேலாண்மை இயக்குநர், |
0421-2212499 |
44 |
மேலாண்மை இயக்குநர், |
04255-253103 |
44 |
மேலாண்மை இயக்குநர், |
04252-224773 |
45 |
மேலாண்மை இயக்குநர், |
04258-220609 |
நாமக்கல் மண்டலம் |
||
46 |
மேலாண்மை இயக்குநர், |
04286-281379, 280174 |
47 |
மேலாண்மை இயக்குநர், |
04287-222224, 225011 |
48 |
மேலாண்மை இயக்குநர், |
04288-252359, 255022, 250511 |
பெரம்பலூர் மண்டலம் |
||
49 |
மேலாண்மை இயக்குநர், |
04328-277142 |
அரியலூர் மண்டலம் |
||
50 |
மேலாண்மை இயக்குநர், |
04329 - 222122 9626494978 |
கரூர் மண்டலம் |
||
51 |
மேலாண்மை இயக்குநர், |
04324-260119 |
52 |
மேலாண்மை இயக்குநர், |
04323-222173 |
திருச்சி மண்டலம் |
||
53 |
மேலாண்மை இயக்குநர், |
0431-2770950 |
54 |
மேலாண்மை இயக்குநர், |
0431-2541248 |
55 |
மேலாண்மை இயக்குநர், |
04326-260203 |
56 |
மேலாண்மை இயக்குநர், |
04327-222771 |
57 |
மேலாண்மை இயக்குநர், |
9976751413 |
தஞ்சாவூர் மண்டலம் |
||
58 |
மேலாண்மை இயக்குநர், |
04362-257364 |
59 |
மேலாண்மை இயக்குநர், |
0435-2430808 |
60 |
மேலாண்மை இயக்குநர், |
04374-223791 |
61 |
மேலாண்மை இயக்குநர், |
04373-235045 |
62 |
மேலாண்மை இயக்குநர், |
04372-233231 |
63 |
மேலாண்மை இயக்குநர், பட்டுக்கோட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், 538, முத்துப்பேட்டைசாலை, பட்டுக்கோட்டை |
04373-235045 |
நாகப்பட்டினம் மண்டலம் |
||
64 |
மேலாண்மை இயக்குநர், |
04369 – 250323 |
மயிலாடுதுறை மண்டலம் |
||
65 |
மேலாண்மை இயக்குநர், |
04364 – 223178 |
66 |
மேலாண்மை இயக்குநர், |
9442929011 |
திருவாரூர் மண்டலம் |
||
67 |
மேலாண்மை இயக்குநர், |
04366-232443 |
68 |
மேலாண்மை இயக்குநர், |
04366-242212 |
69 |
மேலாண்மை இயக்குநர், |
9786780382 |
70 |
மேலாண்மை இயக்குநர், |
7338749224 |
புதுக்கோட்டை மண்டலம் |
||
71 |
மேலாண்மை இயக்குநர், |
04371-270593 |
72 |
மேலாண்மை இயக்குநர், |
04322-251387 |
73 |
மேலாண்மை இயக்குநர், |
04333-224239 |
74 |
மேலாண்மை இயக்குநர், புதுக்கோட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், நிஜாம் காலனி, புதுக்கோட்டை. |
|
திண்டுக்கல் மண்டலம் |
||
75 |
மேலாண்மை இயக்குநர், |
0451-2422240 |
76 |
மேலாண்மை இயக்குநர், |
0451-242323 |
77 |
மேலாண்மை இயக்குநர், |
6380132266 |
78 |
ஓட்டன்சத்திரம் வேளாண்மை மேலாண்மை இயக்குநர், ஓட்டன்சத்திரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், காமராஜ் மார்க்கெட், நாகனம்பட்டி சாலை, ஒட்டன்சத்திரம் அஞ்சல், திண்டுக்கல்-624 619. |
|
தேனி மண்டலம் |
||
79 |
மேலாண்மை இயக்குநர், |
04546-252350 |
80 |
மேலாண்மை இயக்குநர், |
04554-267714 |
மதுரை மண்டலம் |
||
81 |
மேலாண்மை இயக்குநர், |
0452-2605384 |
82 |
மேலாண்மை இயக்குநர், |
0452-2415243 |
83 |
மேலாண்மை இயக்குநர், |
04543-258700 |
84 |
மேலாண்மை இயக்குநர், |
04549-280184 |
85 |
மேலாண்மை இயக்குநர், |
04552-252198 |
86 |
மேலாண்மை இயக்குநர், |
04549-270466 |
சிவகங்கை மண்டலம் |
||
87 |
மேலாண்மை இயக்குநர், |
04577-242202 |
88 |
மேலாண்மை இயக்குநர், |
04575-241037 |
விருதுநகர் மண்டலம் |
||
89 |
மேலாண்மை இயக்குநர், |
04562-243381 |
90 |
மேலாண்மை இயக்குநர், |
04566-291724 |
91 |
மேலாண்மை இயக்குநர், |
04563-222294 |
92 |
மேலாண்மை இயக்குநர், |
04562-220698 |
93 |
மேலாண்மை இயக்குநர், |
04563-260258 |
இராமநாதபுரம் மண்டலம் |
||
94 |
மேலாண்மை இயக்குநர், பரமக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், 4/ 393, சரஸ்வதி நகர், வேந்தோனி அஞ்சல், பரமக்குடி -623707 |
04564-230064 |
95 |
மேலாண்மை இயக்குநர், கமுதி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், 5 / 200, திருச்சுளி சாலை, கண்ணார்பட்டி, கமுதி அஞ்சல், கமுதி தாலுக்கா-623603 |
04576-223339 |
96 |
மேலாண்மை இயக்குநர், திருவாடனை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், அரசு மருத்துவமனை அருகில், ஆர்.எஸ்.மங்கலம் அஞ்சல், திருவாடனை தாலுக்கா, திருவாடனை |
04561-251251 |
97 |
மேலாண்மை இயக்குநர், இராமநாதபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், 1610, ஓம் சக்தி நகர், இராமநாதபுரம் |
7708580174 |
தூத்துக்குடி மண்டலம் |
||
98 |
மேலாண்மை இயக்குநர், தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், 136, போல்பேட்டை, தூத்துக்குடி - 2 |
0461-2345487 |
99 |
மேலாண்மை இயக்குநர், புதூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், 46, அருப்புக்கோட்டை ரோடு, விளத்திக்குளம் தாலுக்கா, புதூர்-628905 |
04638-252229 |
100 |
மேலாண்மை இயக்குநர், கோவில்பட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், 962, சாத்தூர் சாலை, வேலாயுதபுரம், கோவில்பட்டி – 628 502 |
04632-220417 |
திருநெல்வேலி மண்டலம் |
||
101 |
மேலாண்மை இயக்குநர், அம்பாசமுத்திரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், 206, புதுகிராமம் தெரு, அம்பாசமுத்திரம் - 627 401 |
04634-250331 |
102 |
மேலாண்மை இயக்குநர், நாங்குநேரி இராதாபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், 120/32 ஏபி, பயணியர் விடுதி சாலை, வள்ளியூர்-627117 |
04637-220305 |
தென்காசி மண்டலம் |
||
103 |
மேலாண்மை இயக்குநர்,
சங்கரன்கோயில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், |
04636-222384 |
104 |
மேலாண்மை இயக்குநர், தென்காசி செங்கோட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், 42 / சி, இரயில் நகர் சாலை, தென்காசி – 627811 |
04633 - 280625 |
கன்னியாகுமரி மண்டலம் |
||
105 |
மேலாண்மை இயக்குநர், தோவாளை அகத்திஸ்வரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், ஹோலி கிராஸ் மருத்துவமனை அருகில், வெட்டூரினி மடம், நாகர்கோயில் - 629 003 |
04652-235867 |
106 |
மேலாண்மை இயக்குநர், கல்குளம் விளவங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், பாப்பம் எதிரில் , திருவள்ளுவர் பணிமனை, மார்த்தாண்டம், - 629 165 |
04651-270094 |
107 |
மேலாண்மை இயக்குநர், |
04651-286094 |
செங்கல்பட்டு மண்டலம் |
||
108 |
மேலாண்மை இயக்குநர், மதுராந்தகம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், 29, மண்டபம் தெரு, மதுராந்தகம் - 603 306 |
044-27552334 |
கள்ளக்குறிச்சி மண்டலம் |
||
109 |
மேலாண்மை இயக்குநர், கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், 25,நேபால் தெரு, கள்ளக்குறிச்சி-606202 |
04151-222329 |
110 |
மேலாண்மை இயக்குநர், திருக்கோயிலூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், பழைய எண்.26 ஏ/ புதிய எண்.10, பிடாரியம்மன் கோயில் தெரு, திருக்கோயிலூர் -605757 . |
04153-252349 |
இராணிப்பேட்டை |
||
111 |
மேலாண்மை இயக்குநர், அரக்கோணம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், எண் - 51, சோளிங்கர் சாலை, ராமதாஸ் நகர், கையனூர் கிராம அஞ்சல், அரக்கோணம் - 631 003 |
04171-220152 |
112 |
மேலாண்மை இயக்குநர், ஆற்காடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், எண் - 69, செய்யார் சாலை, ஆற்காடு |
04172 - 2234686 |
திருப்பத்தூர் மண்டலம் |
||
113 |
மேலாண்மை இயக்குநர், ஆம்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், எல். மாங்குப்பம் கிராமம், தேவளாபுரம் அஞ்சல், ஆம்பூர். |
04174-242011 |
114 |
மேலாண்மை இயக்குநர், திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், 7/ஏ, சேர்மன் ஆறுமுகனார் சாலை, திருப்பத்தூர் |
04179-220058 |
115 |
மேலாண்மை இயக்குநர், வாணியம்பாடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், லூத்ரன் சர்ச் அருகில், புது டவுன் பைபாஸ் சாலை, திருவள்ளுவர் நகர், வாணியம்படி-635 752. |
04174-227122 |
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் 16.04.1930-ல் பதிவு செய்யப்பட்டு 30-4-1930-ல் செயல்படத் துவங்கியது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் முழுவதும் இச்சங்கத்தின் விவகார எல்லையாகும்.
சங்கத்திற்கு இரண்டு கிளைகள் உள்ளன. சங்கத்தின் கொங்கணாபுரம் கிளை 05.12.1936 ஆம் தேதியிலும், மல்லசமுத்திரம் கிளை 16.07.1975 ஆம் தேதியிலும் ஆரம்பிக்கப்பட்டு நன்கு செயல்பட்டு வருகின்றன. மேலும் பருவ காலங்களில் தேவூர், ஜலகண்டாபுரம், மற்றும் மாமுண்டி ஆகிய இடங்களில் விற்பனை மையங்களை ஏற்படுத்தி அதன் மூலம் விவசாய விளைபொருட்களை விற்பனை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சங்கத்தின் நிர்வாகமானது அதன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழக அரசின் கூட்டுறவுத்துறை மூலம் நியமனம் செய்யப்பட்ட மேலாண்மை இயக்குநரையும் கொண்டு நிர்வகிக்கப்படுகிறது.
சங்கத்தில் 31.03.2023-ல் 102958 உறுப்பினர்கள் மொத்தம் ரூ.2,29,83,163.00 பங்குத்தொகையுடன் இருந்துள்ளனர். மொத்த உறுப்பினர்களில் 65132 விவசாய உறுப்பினர்களும் மற்றும் 37948 இணை உறுப்பினர்களும் உள்ளனர். அரசு பங்குத் தொகை ரூ.4,80,000.00 நிலுவையுள்ளது
சங்கத்தின் கடன் பெறும் அதிகபட்ச தகுதி, பங்குத்தொகை மற்றும் சேமநிதி சேர்ந்த அதன் எட்டு மடங்கு ஆகும். சங்கத்தில் 31.03.2023 -ல் உறுப்பினர்களின் இட்டுவைப்பு ரூ.3525.61ம் மற்றும் பணியாளர்களின் வைப்புத்தொகை ரூ.64.31 இலட்சமும் நிலுவையுள்ளது. கிடங்கு கட்டுமானப் பணிகளுக்காக மட்டுமே அரசுக்கடன் பெறப்பட்டுள்ளது. மேலும் விவசாய விளைபொருள் விற்பனை பணியை மேற்கொள்ள சங்கம் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காசுக்கடன் பெற்று பயன்படுத்தி வருகிறது. மேலும் சங்கம் உறுப்பினர்களிடமிருந்து இட்டுவைப்புகளை பெற்று வருகிறது.
இச்சங்கத்தின் தலைமை அலுவலகம், கிளைகள் மற்றும் பருவகால விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் முக்கிய விவசாய விளைபொருட்கள் பருத்தி, மஞ்சள், தேங்காய்பருப்பு, நிலக்கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்திவிதை, மற்றும் மக்காச்சோளம் ஆகும். கோடைகாலப்பருத்தி வகைளின் விற்பனைக்காலம் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலும், குளிர்காலப்பருத்தி வகைகளின் விற்பனைக்காலம் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையும் மற்றும் நிலக்கடலை செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலும், எள் ஜுன் முதல் அக்டோபர் வரையிலும், ஆமணக்கு டிசம்பர் முதல் மார்ச் வரையிலும் ஆகும். இது போன்றே மஞ்சள் பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலும், தேங்காய் பருப்பு பிப்ரவரி முதல் ஜுலை வரையிலும் விற்பனை செய்யப்படும் காலமாகும்.
வ என் |
விளைப்பொருட்கள் |
விளைப்பொருட்கள் |
விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் |
1 | நிலக்கடலை | 2.00 % | 60 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ.17.39 |
2 | பஞ்சு | 2.00% | 1% |
3 | எள் | 2.00% | 75 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ.29.25 |
4 | ஆமணக்கு விதைகள் | 2.00% | 75 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ.7.64. |
5 | ஜி.நட்டு கர்னல்கள் | 1.00% | |
6 | தேங்காய் கர்னல்கள் | 1.50% | 64 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ.17.925. |
7 | சோளம் | 2.00% | 100 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ.16.15 |
8 | சூரிய மலர் விதைகள் | 2.00% | 50 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ.11.37 |
9 | மஞ்சள் | 2.00% +Rs.26.41 | 1 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ.26.40 |
சங்கம் விவசாய இடுபொருட்களான இரசாயன உரங்கள், விதைகள், புண்ணாக்கு, மாட்டுத்தீவனங்கள் போன்றவற்றையும் மற்றும் விவசாய உபகரணங்களையும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்து வருகிறது. சங்கத்தின் மூலம் திருச்செங்கோடு, கொங்கணாபுரம் மற்றும் மல்லசமுத்திரம் ஆகிய இடங்களில் செயல்படும் மூன்று சேவைக் கேந்திரங்கள் மூலம் மேற்கண்ட அனைத்து விவசாய இடுபொருட்களையும் விநியோகம் செய்து வருகிறது.
விவசாயிகளால் கொண்டு வரப்படும் விளைப்பொருட்களை டெண்டர் மூலம் விற்பனை செய்வதற்காகவும், மேற்படி டெண்டர் மூலம் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களுக்கான தொகை வசூலாகும் வரை பாதுகாப்பாக வைத்திட சங்கத்தில் 213690 மெ.டன் கொள்ளளவு கொண்ட 20 கிடங்குகள் உள்ளன
சங்கம் கடன் விற்பனை இணைப்புத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சங்கம் நிலக்கடலை மற்றும் பருத்தி அறுவடை பருவகாலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
சங்கம் உறுப்பினர்களுக்கு அவர்களது விளைப்பொருட்கள் மீது சரக்கீட்டுக்கடன் வழங்கி வருகிறது. இதன் மூலம் உறுப்பினர்கள் தங்களது விளைப்பொருட்களை சங்கத்தில் இருப்பு வைத்து நல்ல விற்பனை விலை கிடைக்கும் சமயத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
சங்கத்தின் சொந்த நிதி 31.03.2020-ல் ரூ.6195.67 இலட்சம் உள்ளது. சங்கம் மேற்படி நிதியை விவசாய விளைபொருள் விற்பனைக்கு பருவகாலங்களில் மட்டும் பயன்படுத்திகிறது. விளைபொருள் விற்பனைப் பருவகாலம் அல்லாத காலங்களில் மேற்படி நிதியை இலாபகரமாக பயன்படுத்த இயலாத நிலை ஏற்படுவதைத் தவிர்க்கவும், வங்கியில் இட்டுவைப்பு செய்யும் போது குறைந்த அளவே வட்டி கிடைப்பதால் மேற்படி நிதியை இலாபகரமாக செயல்படுத்தும் பொருட்டும் சங்கம் 04.10.1994 முதல் உறுப்பினர்களுக்கு நகைக்கடன்களை வழங்கி வருகிறது.
வ. எண் |
நகைக்கடன் சேவை மையத்தின் பெயர் |
1 |
திருச்செங்கோடு தலைமையகம் |
2 |
கொங்கணாபுரம் கிளை |
3 |
மல்லசமுத்திரம் கிளை |
4 |
ஓட்டப்பட்டி |
5 |
மகுடஞ்சாவடி |
6 |
மோர்பாளையம் |
7 |
வேலகவுண்டம்பட்டி |
8 |
எளம்பிள்ளை சேவை மையம் |
9 |
ஜலகண்டாபுரம் |
10 |
குஞ்சாம்பாளையம் |
11 |
குமரமங்கலம் |
உறுப்பினர்களின் விவசாய விளைப்பொருட்களை பதனிடுவதற்காக சங்கத்தின் தலைமை அலுவலகம் திருச்செங்கோட்டில் 8 எண்ணெய் பிழியும் ரோட்டரிகள் சங்கத்திற்கு சொந்தமாக உள்ளது. சங்கம் "அர்த்தனாரீஸ்வரா" பிராண்டு அக்மார்க் நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய், அக்மார்க் மஞ்சள் தூள் மற்றும் "அர்த்தனாரீஸ்வரா" பிராண்டு அக்மார்க் அரிசி வகைகளை 5 கிலோ, 10 கிலோ, 25 கிலோ மற்றும் 75 கிலோ பைகளில் தயார் செய்யப்பட்டு சங்கத்தின் விற்பனைப்பிரிவுகள் மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
பருப்பு பதனிடும் அலகு சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நிறுவப்பட்டுள்ளது. சங்கம் இந்த அலகுகள் மூலம் பதனிடப்பட்டு துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தயார் செய்து அவற்றை சங்கத்தின் விற்பனைப்பிரிவுகள் மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சங்கத்திற்கு சொந்தமாக 24 நியாயவிலைக்கடைகளும், ஒரு மண்ணெண்ணெய் பங்க் உள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு கட்டுப்பாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சங்கம் திருச்செங்கோடு வட்டத்திற்கு முதன்மைச் சங்கமாக செயல்பட்டு 37 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நடத்தும் 231 நியாயவிலைக்கடைகளுக்கும் மற்றும் 2 கூட்டுறவு பண்டகசாலைகள் நடத்தும் 2 நியாயவிலைக்கடைகளுக்கும் கட்டுப்பாட்டு பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. மேலும் மொத்தம் உள்ள 257 நியாயவிலைக்கடைகளில் 233 இதர நியாயவிலைக்கடைகளுக்கும் மற்றும் சங்கத்திற்கு சொந்தமான 24 நியாயவிலைக்கடைகளுக்கும் கட்டுப்பாடற்ற பொருட்களையும் விநியோகம் செய்து வருகிறது.
நியாயவிலைக் கடைகளைத் தவிர சங்கத்திற்கு சொந்தமாக திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் மற்றும் கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் நுகர்வோர் பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து மளிகை பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றை தனியார் வியாபாரிகளுடன் போட்டியிட்டு மலிவு விலைகளில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மருந்துகள், இரும்புக் கம்பிகள், காலணிகள், பால், மாட்டுத்தீவனம், தவிடு மற்றும் பிண்ணாக்கு போன்றவற்றை சங்கத்தின் சொந்த விற்பனை பிரிவுகள் மூலம் விவசாய உறுப்பினர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
சங்கம் சுயசேவை பிரிவிற்கென தனியாக 2 மாடி கட்டடம் ரூ.36.44 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 4850 வகையான பொருட்கள் இப்பிரிவில் இருப்பு வைக்கப்பட்டு, பர்னீச்சர் உட்பட சராசரி விற்பனையாக நாளொன்றுக்கு ரூ.3.00 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சங்கம், இண்டேன் எரிவாயு விநியோகஸ்தராக செயல்பட்டு இண்டேன் எரிவாயு சிலிண்டர்கள் , அடுப்புகள் மற்றும் உபகரணங்களை திருச்செங்கோடு நகர பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு 1984 ஆம் ஆண்டு முதல் விநியோகம் செய்து வருகிறது. சங்கம் திருச்செங்கோடு நகர பகுதியில் 19611 நுகர்வோர் இணைப்புகளையும், 2962 வணிக எரிவாயு இணைப்புகளையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.
சங்கம், இந்தியன் ஆயில் கழகத்தால் சர்வோ ஆயில் மொத்த விநியோகஸ்தராக சேலம் மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டது. சர்வோ ஆயில் வகைகளான இன்ஜின் ஆயில், கீர் ஆயில், பிரேக் ஆயில், கூலன்ட்ஸ், கிரீஸ் வகைகள் போன்றவற்றை சேலம் மாவட்டத்திலுள்ள இந்தியன் ஆயில் கழக சில்லரை விற்பனை நிலையங்கள்(பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள்), சர்வோ ஆயில் விற்பனை கடைகள் மற்றும் மெக்கானிக் பணிமனைகள் போன்றவற்றிற்கு சங்க லாரி மூலம் 12.09.2003 முதல் விநியோகம் செய்து வருகிறது.
சங்கம், இந்தியன் ஆயில் கழகத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகஸ்தராக நியமனம் செய்யப்பட்டு சங்கத்தின் தலைமை அலுவலகம் திருச்செங்கோட்டில் பெட்ரோல் பங்க் நிறுவப்பட்டு பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளை விநியோகம் செய்து வருகிறது. சங்கம் நாமக்கல் மாவட்டத்தில் பெட்ரோல் விற்பனையில் முதலிடம் பெற்றதற்காக இந்திய ஆயில் கழகத்தால் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் சங்கம் இந்தியன் ஆயில் கழகத்தால் திரவ எரிவாயு விநியோகஸ்தராக நியமனம் செய்யப்பட்டு பெட்ரோல் பங்க் வளாகத்தில் திரவ எரிவாயு பங்க் அமைத்து விற்பனை செய்து வருகிறது. .
சங்கத்தின் பயன்பாட்டிற்கும் மற்றும் உறுப்பினர்கள் குறைந்த வாடகையில் விவசாய விளைபொருட்களை சங்கத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்வதற்கு ஏதுவாக சங்கத்திற்கு சொந்தமாக 4 லாரிகள் உள்ளன.
சங்கத்தின் முக்கிய பணியான விவசாய விளைபொருள் விற்பனை பணியோடு மட்டுமில்லாது சங்கத்தின் கொங்கணாபுரம் கிளையில் 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பால் பிரிவு இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் இப்பிரிவின் மூலம் 52 உறுப்பினர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு சராசரியாக நாளொன்றுக்கு 95 லிட்டர் வீதம் தமிழ்நாடு பால் பண்ணை வளர்ச்சிக் கழகம், ஈரோட்டிற்கு அனுப்பட்டு வருகிறது. பின்னர் இப்பிரிவு விரைவாக முன்னேற்றம் அடைந்து ஆண்டு நாளொன்றுக்கு 600 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருடம் ஒன்றிற்கு ரூ.50.60 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது
சங்கத்தின் மூலம் செயல்படும் மூன்று மருந்தகங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 20% வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது.
கட்டடங்கள் கட்டுவதற்கு தேவையான ISI தரம் பெற்ற புகழ்பெற்ற நிறுவனங்களான TATA TISCAN RAN மற்றும் INDIA-JSK ஆகிய நிறுவனங்களின் 6 மி.மீ முதல் 25 மி.மீ வரையான இரும்புக் கம்பிகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது.
சங்கத்தின் தமையைகத்தில் அர்த்தநாரீஸ்வரா தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு தாயரிப்பு நிலையம் 28.07.2022 முதல் தொடங்கப்பட்டு ஆறு வகை நறுமணங்களுடன் கூடிய தேங்காய் எண்ணெய் குளியல் சோப்புகள் தயார் செய்யப்பட்டு சங்கத்தின் விற்பனைப் பிரிவுகளிலும், இதர கூட்டுறவு நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சங்கம் தொடர்ந்து இலாபத்தில் செயல்பட்டு வருகிறது. சங்கம் 1989-90,1990-91 மற்றும் 1993-94 ஆகிய ஆண்டுகளில் விவசாய விளைபொருட்கள் விற்பனையில் சிறந்த செயல்பாட்டிற்காக தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்தால் (NAFED) சங்கம் தேர்வு செய்யப்பட்டு சங்கத்திற்கு "பஞ்சாப் ராவ் தேஷ்முக்" விருது வழங்கப்பட்டுள்ளது.மேலும் கூடுதலாக 1989-90,1990-91 மற்றும் 1993-94 ஆகிய ஆண்டுகளில் சங்கத்தின் சிறந்த செயல்பாட்டிற்காக ரொக்கப்பரிசு ரூ.10,000/- வீதம் மூன்று வருடங்களுக்கும் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சங்கம் தமிழ்நாடு மாநில அளவில் சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்பட்டு பலமுறை விருதுகள் பெற்றுள்ளது. தற்பொழுது 2018-2019 ஆம் ஆண்டிற்கு சங்கம் தமிழ்நாடு மாநில அளவில் சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது. சங்கம் உறுப்பினர்களுக்கு 14% பங்குத்தொகையும், போனஸ் சட்டத்தின்படி பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. இச்சங்கம் தொடர்ந்து கூட்டுறவுத்துறையின் தணிக்கையில் "ஏ" வகுப்பில் வைக்கப்பட்டு சிறப்பு பெற்று வருகிறது
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கமானது 08.12.1935 அன்று பதிவு செய்யப்பட்டது. இச்சங்கத்தின் பங்கு மூலதனம் ரூ.50 இலட்சமாகும். இச்சங்கம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், குந்தா மற்றும் பந்தலூர் தாலுகா மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது.
சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு மற்றும் தமிழக அரசால் நியமிக்கப்படும் மேலாண்மை இயக்குநரைக் கொண்டு சங்கம் நிர்வகிக்கப்படுகிறது.
நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் கட்டுப்பாட்டில் 17 சில்லரை விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், உதகமண்டலத்திலுள்ள தலைமை அலுவலகம் மற்றும் மேட்டுப்பாளையம் கிளையிலும் விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. விற்பனை நிலையங்கள் மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறங்களிலும் மற்றும் வட்ட அளவில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், குந்தா மற்றும் பந்தலூர் உள்ளிட்ட இடங்களில் செயல்படுகின்றன. அவை பின்வருமாறு
பல்வேறு நிலையான கலவை ரகங்கள் உரக் கட்டுபாட்டு விதிகளுக்குட்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அவை
சங்கமானது 19.08.1994 முதல் மேட்டுப்பாளையம் கிளை மூலம் நகைக்கடன் வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து கூடுதல் நகைக்கடன் மையங்கள் பின்வரும் இடங்களில் திறக்கப்பட்டன
பின்வரும் இடங்களில் திறக்கப்பட்டன
பொது விநியோகத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது
சங்கத்திற்கு சொந்தமான 1.50 ஏக்கர் காலி நிலமானது கடந்த 22 வருடங்களாக சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சங்கத்திற்கு சொந்தமான 2 திருமண மண்டபங்கள் உதகமண்டலம் மற்றும் கோத்தகிரியில் செயல்பட்டு வருகின்றன.
சங்கம் 25.08.1936 அன்று பதிவு செய்யப்பட்டு 16.09.1936 முதல் செயல்பட துவங்கியது. சங்கத்தின் விவகார எல்லை சேலம், ஓமலூர், மேட்டூர், ஏற்காடு மற்றும் வாழப்பாடி ஆகிய 5 வட்டங்கள் அடங்கியது.
சங்கத்தின் நிர்வாகமானது அதன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழக அரசின் கூட்டுறவுத்துறை மூலம் நியமனம் செய்யப்பட்ட மேலாண்மை இயக்குநரையும் கொண்டு நிர்வகிக்கப்படுகிறது.
வ. எண். |
உறுப்பினர் விபரம் |
உறுப்பினர் எண்ணிக்கை |
பங்கு தொகை (ரூ. இலட்சத்தில்) |
1 |
சங்கங்கள் |
164 |
7.05 |
2 |
விவசாயிகள் |
53,584 |
6.20 |
3 |
அரசு |
- |
- |
மொத்தம் |
53,748 |
13.25 |
விற்பனை- விவசாய விளைப்பொருட்களில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கடலை, பருத்தி, நெல், மற்றும் மஞ்சள் போன்ற பொருட்களை விற்பனை முகவராக இருந்து செயல்பட்டு வருகிறது.
(1).அயோத்தியாப்பட்டணம்,
(2).வாழப்பாடி சொந்த கிளை நிலங்கள்.
(1).கொளத்தூர்
(2).இராமமூர்த்திநகர்
(3).எஸ். பாப்பாரப்பட்டி
(4).பொறையூர் ( தெற்கத்தி காடு ).
முகமைப்பிரிவு (கடலைக்காய்)
முகமைப்பிரிவு (பருத்தி)
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சங்கம் அத்தியாவசியப் பொருட்களை 542 நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கும் முதன்மைச் சங்கமாக செயல்பட்டு வருகிறது. மேலும், சங்கத்திற்கு சொந்தமான 98 நியாயவிலைக் கடைகளையும் நடத்தி வருகிறது. மேலும், 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மண்ணெண்ணெய் வழங்கும் நிலையம் ஒன்றும் சொந்தமாக நடத்தி வருகிறது. சங்கத்தின் கடந்த மூன்று ஆண்டுகளில் கட்டுப்பாட்டு பொருட்கள் விநியோகம் விபரம் வருமாறு
சங்கத்தின் சொந்தமான உள் கட்டமைப்பு வசதிகள் கொண்ட கிடங்குகள் சங்கத்தின் வியாபார வளர்ச்சிக்கு பயன்படுகிறது.
(1) கிடங்குகள்- சங்கத்திற்கு சொந்தமாக 19 கிடங்குகள் உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 13500 மெ.டன் ஆகும்.
கிடங்கு உள்ள இடங்கள் விபரம்
வ. எண் | கிடங்கு அமைந்துள்ள இடம் | எண்ணிக்கை | கொள்ளளவு (மெ.டன்) |
---|---|---|---|
1 |
தலைமையகம் |
11 |
7000 |
2 |
மாசிநாய்க்கன்பட்டி (அ.பட்டணம்) |
6 |
6000 |
3 |
வாழப்பாடி |
2 |
1500 |
மொத்தம் |
19 |
14500 |
(i) ரோட்டரி அரவை அலகு
(ii)நிலக்கடலை உலர வைத்தல்.
(iii) பொது சேவை மையம்
(iv) நகைக்கடன் வழங்குதல்
(v).அம்மா மினி சூப்பர் மார்கெட்
(vi).அம்மா மருந்தகம்
ஈரோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிறந்த கூட்டுறவாளருமான திரு.எஸ்.கே. பரமசிவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்றவு விற்பனைச் சங்கம் 31.01.1960ல் பதிவு செய்யப்பட்டு 29.06.1960 அன்று 58 உறுப்பினர்களுடன் ரூ.14,885/- பங்கு மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம் தற்போது 31.03.2023 முடிய 35,405 அங்கத்தினர்களுடன் ரூ.43.35 இலட்சம் பங்கு மூலதனத்துடனும் செயல்பட்டு வருகிறது.
சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு மற்றும் தமிழக அரசால் நியமிக்கப்படும் மேலாண்மை இயக்குநரைக் கொண்டு சங்கம் நிர்வகிக்கப்படுகிறது
ஈரோடு மாவட்டம் தமிழகத்தில் மஞ்சளுக்கான முக்கிய வர்த்தக மையமாகும். மேலும், மஞ்சளுக்கான புவிசார் குறியீட்டையும் ஈரோடு மாவட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. சங்க உறுப்பினர்கள் தமது வேளாண் விளைபொருட்களை குறிப்பாக மஞ்சளை சந்தைப்படுத்த சங்கம் துணை புரிகிறது. சங்க வளாகத்தில் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் மின்னணு முறையில் ஏலம் நடைபெறுகிறது. அதிகபட்ச விலை கோரும் வர்த்தகர்க்கு விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து ஏலம் உறுதி செய்யப்படுகிறது. மேலும், இச்சேவைக்கு மஞ்சளின் ஒட்டு மொத்த விற்பனை விலையில் 1.5 சதவீதம் சேவை கட்டணமாக பெறப்படுகிறது. சங்க உறுப்பினர்களுக்கு மஞ்சள் விற்பனை தொகை RTGS, NEFT மற்றும் பணமாக உடனடியாக வழங்கப்படுகிறது.
3 மாதங்களுக்கு இலவச கிடங்கு வசதி,சங்கம் இலவசமாக மருந்து அடித்தல்(Fumigation)மற்றும் விளைபொருளுக்கு காப்பீடு வசதியும் செய்து தரப்படுகிறது. சங்கத்தின் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மஞ்சளின் மொத்த மதிப்பில் 70 சதவிகிதம் கடனாக (அதிகபட்சம் ரூ.3 இலட்சம் வரை) 9 சதவிதிக வட்டி வீதத்தில் தானிய ஈட்டுக் கடனாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் அங்கத்தினர் தமது விளைபொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை வரும் வரை காத்திருந்து ஏதுவான சூழலில் விற்பனை செய்ய வழிவகுக்கிறது. அங்கத்தினர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வரை தங்களது விளைபொருளை பாதுகாத்து வைத்து விற்கும் வகையில் தானிய ஈட்டுக் கடன் வழங்கி வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்ட தானிய ஈட்டுக்கடன்.
பதனிடும் அலகு
கூட்டுறவு சங்கத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் அதிகாரப்பூர்வ வலைதளம் &npsb; www.mangalammasala.com என்ற வலைதள முகவரி மற்றும் mangalammasala என்ற கைபேசி செயலி (unadulterated) மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
மொபைல் அப்ளிகேஷன்
இ - டெண்டர் அப்ளிகேஷன்
Web url : www.eapcms.com
Play store : EAPCMS
Consumer care – 0424-2211129
Email id: erodeapcms@gmail.com,
Mobile App > Play Store > Mangalammasala
"மங்களம்" பொருட்கள் தரமானதாகவும், கலப்படமின்றியும் உள்ள காரணத்தினால், சந்தையில் தனிச் சிறப்புடன் திகழ்கிறது. இப்பொருட்கள் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில், பொதுவிநியோகத் திட்ட கடைகள் மற்றும் தனி வணிகர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.இச்சங்கம் மசாலா பொருட்களை நாடு முழுவதும் விற்பனை செய்யும்பொருட்டு இப்ஃகோ கிசான் சன்சார் லிமிடெட்., நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி ஈரோடு வேளாண் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பொருட்களை இப்ஃகோ கிசான் சன்சார் லிமிடெட்., நிறுவனம் நாடு முழுவதும் "ஸ்வர்ணஹர்" என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் மாநில அளவில் சிறந்த கூட்டுறவு விற்பனைச் சங்கமாக 1994, 1996, 2003, 2004, 2005, 2008, 2013, 2014, 2015, 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இச்சங்கமானது 11.07.2013 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழுவால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது
ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக லாபத்தில் இயங்கிவரும் இச்சங்கமானது விவசாய அங்கத்தினருக்கு மகத்தான சேவைகளை வழங்கி வருகிறது. மேலும், 1990 முதல் ஆண்டுதோறும் அதிகபட்ச பங்கு ஈவுத்தொகையாக 14 சதவீதம் வழங்கி வருகிறது.
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் 25.07.1942 அன்று பதிவு செய்யப்பட்டு அன்றைய தினமே பணிகளை தொடங்கி செயல்பட்டு வருகிறது. 25.07.1942-ல் 72 உறுப்பினர்களுடன் ரூ.17.550 பங்கு மூலதனத்துடன் தொடங்கி தற்போது 11295 உறுப்பினர்களுடன் ரூ 3.24 இலட்சம் பங்கு மூலதனத்துடன் தற்போது செயல்பட்டு வருகிறது.
உறுப்பினர்களின் உடனடி நிதித்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சங்கம் நகைக்கடன்கள் ஆண்டுக்கு சுமார் 1.5 கோடி வரை வழங்கி வருகிறது .
சங்கத்தில் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து முழு மானியத்துடன் 60 மெ.டன் எடைதிறன் கொண்ட கணினி எடை மேடை அமைக்கப்பட்டு 24.02.2014 முதல் உறுப்பிர்களுக்கும், வியாபாரிகளுக்கும் குறைந்த கட்டணத்தில் எடை செய்து சங்கத்திற்கு உறுப்பினர்கள் கொண்டு வரும் வேளாண் விளைபொருள்களையும் மற்றும் வியாபாரிகள் டெலிவரி எடுத்து செல்லும் போதும் கணினி எடைமேடை மூலம் எடையிட்டு எடுத்துச் செல்லப்படுவதால் உறுப்பினர்கள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து நம்பகத்தன்மை மேம்படுகிறது. மேலும் மாதம் ஒன்றுக்கு சராசாயாக 1500 உறுப்பினர்களுக்கு சேவை புரிவதன் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ 30000 வருமானம் ஈட்டி வருகிறது.
சங்கத்தின் இ-சேவை மூலம் வருவாய் துறை மற்றும் அரசின் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து ஆண்டுக்கு சுமார் ரூ.1.2 இலட்சம் இலாபம் ஈட்டுகிறது.
25.11.1994 முதல் பெருந்துறை வட்டத்திற்கு முதன்மை சங்க பணியை ஏற்று கட்டுப்பாட்டுப்பொருட்களை 149 நியாயவிலைக்கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறது. சங்கம் 29 முழுநேர நியாயவிலைக்கடைகளையும், 6 பகுதி நேர நியாய விலைக்கடைகளையும் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படுத்தி வருகிறது. மேலும் 20 கிலோ கொள்ளளவு மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்தை செயல்படுத்தி வருகிறது.
சங்கம் 5100 மெ.டன் கொள்ளளவுக் கொண்ட 9 கிடங்குகளை கொண்டுள்ளது. அதில் 1000 மெ.டன் கொள்ளளவில் 3 கிடங்குகள், 500 மெ.டன் கொள்ளளவில் 3 கிடங்குகள் மற்றும் 300,200,100 மெ.டன் கொள்ளளவில் தலா 1 கிடங்கும் அடங்கும். சங்கத்திற்கு சொந்தமாக ஒரு விற்பனைக்கூடம் உள்ளது
31.03.2019 ஆம் ஆண்டு வரை தணிக்கை முடிக்கப்பட்டுள்ளது. தணிக்கையின் வகுப்பு "ஏ" வகுப்பு. 2018-19-ஆம் ஆண்டு தணிக்கையில் நிகர இலாபம் ரூ.75.76 இலட்சத்தை ஈட்டியுள்ளது.