துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் 29.04.1955 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, 1397 உறுப்பினர் மற்றும் ரூ 0.33 இலட்சம் பங்கு மூலதனத்துடன் 05.05.1955 முதல் செயல்பட்டு வருகிறது.
சங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.200 இலட்சம் A வகுப்பு உறுப்பினர்கள் செலுத்திய பங்கு மூலதனம் ரூ .156.04 இலட்சம் , B வகுப்பு உறுப்பினர்கள் செலுத்திய பங்கு மூலதனம் ரூ.0.10 இலட்சம் ஆகும். துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் ரூ.627.74 இலட்சம் மதிப்புள்ள நிலம், கட்டிடங்கள், கிடங்குகள், இயந்திர தளவாடங்கள், வாகனங்கள் மற்றும் இதர இனங்கள் உள்ளன. வைப்பு மற்றும் கடன் பிரிவு தற்போது ரூ.163.04 கோடி கடன் நிலுவைத் தொகை மற்றும் ரூ.169.92 கோடி டெபாசிட் நிலுவைத் தொகையுடன் கீழ்க்கண்ட 10 கடன்பிரிவு கிளைகளுடன் நகைக் கடன் உள்ளிட்ட இதர வகைக் கடன்களையும் வழங்கி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
விவசாய இடுபொருட்களான சான்று விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், வேளாண் உபகரணங்கள் மற்றும் நிதியுதவி ஆகியவை ஒரே கூரையின் கீழ் வழங்குதல்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு மற்றும் அரசால் நியமிக்கப்படும் மேலாண்மை இயக்குநரால் சங்க நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு விருத்தி வித்து மரபணு தூய்மை மற்றும் முளைப்புத்திறன் கொண்ட தரமான விதைகளை சகாய விலையில் வழங்கிட ஏதுவாக விதை உற்பத்தி திட்டம் 1978 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பருத்தி, நெல், காய்கறி விதைகள் இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
விருத்தி விதைகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. விதை உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் நிலத்தைப் பண்படுத்துவதிலிருந்து அறுவடை காலம் வரை இலவசமாக களப்பணியாளர்களால் வழங்கப்படுகின்றன. சான்று விதைக்கு தெரிவு செய்யப்பட்ட நிலங்களை சான்று விதைகள் துறையால் அவ்வப்போது ஆய்வு செய்யப்படுகின்றன. தமிழ்நாடு விதைச்சான்று துறை, உற்பத்தி செய்த விதைகள் பரிசோதனை செய்யப்பட்டு, சான்று வழங்கியதும் சந்தை விலையைக் காட்டிலும் 10 முதல் 15 சதவீதம் வரை விலை அதிகம் கொடுத்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. தொழிற்கூடத்திலேயே பதப்படுத்தி ஆய்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தொழிற்கூட ஆய்விற்குப் பின்னர் சான்று விதைகளின் தன்மை விருத்தி வித்து மரபணு தூய்மை மற்றும் முளைப்புத்திறன் ஆகியவை சரிபார்க்கப்பட்டு, சான்று விதைகள் இயக்குநரகத்தால் சான்று பெறப்பட்டு விவசாயிகளுக்கு இவ்விதைகள் வழங்கப்படுகின்றன.
துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் அனைத்து பயிர்களுக்கும் பொருத்தமான எண் 2, 2a, 3,4,5,7,9,10,12,14,16,18,23,25,26 மற்றும் 27 கலவை உரங்களை தயாரித்து வருகிறது. இக்கலவை உரங்கள் அதிக மகசூல் அளிப்பதாலும், பயிர்களுக்கு ஏற்றவாறு கலந்து தரமான முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதாலும், விவசாயிகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் 6543 மெ.டன் உரங்கள் தயாரிக்கப்பட்டது.
பண்ணை செயல்பாடுகளை இயந்திரமயமாக்கிட 1970 ஆம் ஆண்டில் CARE (Cooperative for American Relief Everywhere) என்ற நிறுவனம் 5 டிராக்டர்கள் உரிய உபகரணங்களுடன் நன்கொடையாக அளித்தது.
அன்று முதல் விவசாயிகளின் உழுதல் பணிக்கு டிராக்டர்கள் உரிய உபகரணங்களுடன் நியாயமான வாடகையில் சங்கம் வழங்கி வருகிறது. தற்போது ரோட்டோவேட்டர் (Rotavator) மற்றும் ஷ்ரெட்டர் (Sherdder) உடன் கூடிய 4 டிராக்டர்கள் உபயோகித்தில் உள்ளன.
மேலும் வேளாண் உபகரணங்களை பேப்ரிகேஷன் செய்வதற்கு வேளாண் கருவிகள் தொழிற்சாலையை சங்கம் தொடங்கியுள்ளது. பின்வரும் வேளாண் உபகரணங்களை மாநிலத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கி வருகிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நவீன வேளாண் உபகரணங்களை டியூகாஸ் நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது.
டியூகாஸ் நிறுவன பூச்சிக்கொல்லி மற்றும் கோவை விதைகள் ஆகியவற்றுக்கான டேக் மற்றும் அனைத்து வகையான சிட்டைகள் கூட்டுறவு அச்சகத்தில் அச்சிடப்படுகிறது. வங்கி கணக்குப்புத்தகம், வவுச்சர், லெட்ஜர், இரசீதுகள் உள்ளிட்ட அனைத்து வகையான பைண்டிங் மற்றும் அச்சுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விவசாயிகள், உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் டிராக்டர் பிரிவு எரிபொருள் தேவையை பெட்ரோல் பங்க் பூர்த்தி செய்து வருகிறது. சராசரியாக ஒரு மாதத்தில் ரூ.184.85 லட்சம் விற்பனை செய்யப்படுகிறது.
உரங்கள், பூச்சிக்கொல்லிகள், விதைகள், வேளாண் உபகரணங்கள், வேப்பம்பிண்ணாக்கு மற்றும் நுண்ணூட்ட கலவை உரங்கள் விற்பனை செய்ய சில்லரை பிரிவு செயல்பட்டு வருகிறது.
ஆவின் நிறுவன பொருட்களான பால், தயிர், வெண்ணெய், நெய், இனிப்பு பண்டங்கள் விற்பனை செய்ய முனைந்தது.
விவசாயிகளின் வாழ்க்கைத்திறனை மேம்படுத்த தென்னை வளர்ப்போர்/விவசாயிகளிடமிருந்து நீரா கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலாப நோக்கமின்றி விற்பனை செய்து வருகிறது.
அசோகா செக்கு எண்ணெய் என்ற வர்த்தக பெயரில் தயாரித்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விநியோகம் செய்து வருகிறது.
அசோகா என்ற வர்த்தகப் பெயரில் முதன் முறையாக வேப்பம்பிண்ணாக்கு தயாரிப்பில் டியூகாஸ் நிறுவனம் ஈடுபட்டது. உலர்ந்த வேப்பம்பழம் பொடியாக்கப்பட்டு வேப்பம்பிண்ணாக்கு தயாரிக்கப்படுகிறது. இதன் தூய்மை தன்மையால் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. வருட துவக்கத்தில் சராசரியாக 500 மெ.டன் விற்பனை செய்யப்பட்டது.
டியூகாஸ் நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் அசோகா என்ற வர்த்தக பெயரில் நுண்ணூட்ட கலவை உரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. நுண்ணூட்ட கலவைகளான துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம், தாமிரம், மாங்கனீஸ் மற்றும் போரான் ஆகியவைதாவரங்களில் ஏற்படும் வைரஸ் நோய்களை கட்டுப்படுத்தவும், பயிர்களின் மகசூலை அதிகரிக்கவும் பயன்படுகிறது. இந்த நுண்ணூட்ட அடிஉரங்கள் மண்ணின் தரம் மற்றும் பயிர்களின் நிலைப்புத்தன்மையை அதிகரிக்க செய்கிறது.
இந்த அடிஉரமிடல் முறை சோதனை அடிப்படையில் தென்னை, வாழை மற்றும் நெல் சாகுபடியில் உபயோகப்படுத்தப்பட்டது.
இந்நிறுவனம் 1980 ஆம் ஆண்டில் வெள்ளி விழா கொண்டாடியது. அப்போதைய இந்திய குடியரசுத்தலைவர் திரு.நீலம் சஞ்சீவ ரெட்டி இவ்விழாவிற்கு வருகை புரிந்தார். 1998-99 முதல் 2010-11 வரை 11 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறந்த கூட்டுறவு நிறுவனமாக தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2005, ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடமிருந்து 2004-05 ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கு சிறந்த கூட்டுறவு நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட்டது.
136 வகையான பயிர்கள் அதன் சந்தை விலை, பயிர் பாதுகாப்பு முறை, நில மறுசீரமைப்பு மற்றும் மழை ஆகிய முக்கிய விவரங்கள் விவசாயிகள் பயனடையும் நோக்கில் இப்கோ நிறுவனம் வழங்கிய தொடுதிரை வேளாண் போர்ட்டல் கியோஸ்க் நிறுவியுள்ளது. டியூகாஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இலாபத்தில் இயங்கி வருகிறது.
வ.எண் |
வகைகள் |
எண்ணிக்கை |
1 |
கூட்டுறவு அருந்தகங்கள் |
25 |
2 |
உப்பு உற்பத்தியாளர் மற்றும் விற்பனைக் கூட்டுறவுச் சங்கம் |
10 |
3 |
முடி திருத்துவோர் கூட்டுறவுச் சங்கம் |
5 |
4 |
சலவைத் தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கம். |
1 |
5 |
நிலக்குடியேற்றக் கூட்டுறவுச் சங்கங்கள் |
11 |
6 |
குத்தகைதாரர் கூட்டுறவு பண்ணை சங்கம் |
11 |
7 |
காய்கறி வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் |
2 |
8 |
தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கங்கள் |
53 |
9 |
பொறியாளர்கள் கட்டுமான கூட்டுறவுச் சங்கம் |
2 |
10 |
வழக்கறிஞர்கள் கூட்டுறவுச் சங்கம் |
4 |
11 |
சுகாதாரக் கூட்டுறவுச் சங்கம் |
1 |
12 |
இதர தனிவகை கூட்டுறவுச் சங்கம் |
10 |
13 |
கூட்டுறவு பண்ணை சங்கம் |
1 |
வ. எண் |
உணவகங்களின் பெயர் |
மண்டலம் |
1. |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையப் பணியாளர்கள் கூட்டுறவு அருந்தகம் |
சென்னை |
2. |
சென்னை துறைமுக இயந்திரபகுதி தொடக்கக் கூட்டுறவு அருந்தகம் |
சென்னை |
3. |
அரசு அலுவலர் கூட்டுறவு அருந்தகம் |
சென்னை |
4. |
தலைமைச் செயலகப் பணியாளர்கள் கூட்டுறவு அருந்தகம் |
சென்னை |
5. |
சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு அருந்தகம் |
சென்னை |
6. |
சென்னை பல் மருத்துவக் கல்லுஹ்ரி மாணவர் பணியாளர் கூட்டுறவு அருந்தகம் |
சென்னை |
7. |
சீமென்ஸ் பணியாளர் கூட்டுறவு அருந்தகம் |
சென்னை |
8. |
சி.எம்.டி.ஏ. பணியாளர்கள் கூட்டுறவு அருந்தகம் . |
சென்னை |
9. |
சென்னை மருத்துவக் கல்லுஹ்ரி மாணவர் மற்றும் பணியாளர் கூட்டுறவு அருந்தகம் |
சென்னை |
10. |
ஈசாப் இந்தியா பணியாளர் கூட்டுறவு அருந்தகம் |
திருவள்ளூர் |
11. |
எல். & ட்டி. வால்வ்ஸ் பணியாளர் கூட்டுறவு அருந்தகம் (அட்கோ) |
திருவள்ளூர் |
12. |
டயிள்யூ எஸ்.ஐ. கூட்டுறவு அருந்தகம் |
திருவள்ளூர் |
13. |
எண்ணுஹ்ர் உருக்காலைப் பணியாளர் கூட்டுறவு அருந்தகம் |
திருவள்ளூர் |
14. |
வேலுஹ்ர் சர்க்கரை ஆலை பணியாளர் கூட்டுறவு அருந்தகம் |
வேலூர் |
15. |
வி.ஜி.127 தமிழ்நாடு தொழில் வெடி மருந்து பணியாளர்கள் கூட்டுறவு அருந்தகம் |
வேலூர் |
16. |
செய்யாறு கூட்டுறவுச் சர்க்கரை ஆலை பணியாளர்கள் கூட்டுறவு சிற்றுண்டி சாலை |
திருவண்ணாமலை |
17. |
எம்.ஆர்.கே. கூட்டுறவுச் சங்க ஆலைப் பணியாளர் கூட்டுறவு உணவகம். |
கடலூர் |
18. |
டீசல் லோகோ பணியாளர்கள் கூட்டுறவுச் சிற்றுண்டி சாலை |
ஈரோடு |
19. |
எம்.எம்.3268, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அலுவலர்கள் கூட்டுறவு சிற்றுண்டிசாலை |
மதுரை |
20. |
தெப்பக்காடு கூட்டுறவு அருந்தகம் |
நீலகிரி |
21. |
ஈ.ஐ.டி. பாரி இந்தியா லிட் பணியாளர் கூட்டுறவு அருந்தகம் |
திருச்சிராப்பள்ளி |
22. |
ஓ.எஸ்.எண்.55 நடிப்பிசை புலவர் கே.ஆர். இராமசாமி கூட்டுறவுச் சர்க்கரை ஆலைப் பணியாளர்கள் கூட்டுறவு சிற்றுண்டி சாலை |
நாகப்பட்டினம் |
23. |
டி.சி.டபிள்யூ தொழிலாளர் கூட்டுறவுச் சிற்றுண்டிசாலை |
தூத்துக்குடி |
24. |
கன்னியாகுமரி வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டுறவு பண்டகசாலை மற்றும் சிற்றுண்டி சாலை |
கன்னியாகுமரி |
25. |
செங்கல்ராயன் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை ஊழியர்கள் கூட்டுறவு உணவகம். |
விழுப்புரம் |
வ.எண் |
சங்கத்தின் பெயர் |
மண்டலம் |
1 |
செய்யூர் அரிசன உப்பு உற்பத்தி விற்பனை கூட்டுறவு சங்கம் |
காஞ்சிபுரம் |
2 |
தையூர் அரிசன உப்பு உற்பத்தி மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கம் |
காஞ்சிபுரம் |
3 |
கோவளம் அரிசன உப்பு உற்பத்தி மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கம் |
காஞ்சிபுரம் |
4 |
காலவாக்கம் அரிசன உப்பு உற்பத்தி மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கம் |
காஞ்சிபுரம் |
5 |
இ. 1388 மரக்காணம் ஆதி திராவிடர் உப்பு உற்பத்தியாளர் கூட்டுறவு மற்றும் விற்பனைச் சங்கம் |
விழுப்புரம் |
6 |
கந்தாடு உப்புத் தொழிலாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் |
விழுப்புரம் |
7 |
இசட் 204 வேதாரண்யம் உப்புத் தொழிலாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் |
நாகப்பட்டினம் |
8 |
தூத்துக்குடி உப்புத் தொழிலாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் |
தூத்துக்குடி |
9 |
இ.இ.229 பழைய காயல் உப்புத் தொழிலாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் |
தூத்துக்குடி |
10 |
ஆறுமுகனேரி உப்புத் தொழிலாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் |
தூத்துக்குடி |
வ.எண் |
சங்கத்தின் பெயர் |
மண்டலம் |
1 |
வானூர் வட்ட முடிதிருத்துவோர் கூட்டுறவுச் சங்கம் |
விழுப்புரம் |
2 |
எப்.சி. 2736 பண்ருட்டி முடி திருத்துவோர் கூட்டுறவுச் சங்கம் |
கடலூர் |
3 |
எஸ்.பி.எஸ். பி.எஸ். 25 வில்லிபுத்துஹ்ர் முடி திருத்துவோர் கூட்டுறவுச் சங்கம் |
விருதுநகர் |
4 |
எஸ்.பி.எஸ்.பி.எஸ். 27 இராஜபாளையம் முடி திருத்துவோர் கூட்டுறவுச் சங்கம் |
விருதுநகர் |
5 |
மதுரை முடி திருத்துவோர் கூட்டுறவுச் சங்கம் |
மதுரை |
வ.எண் |
சங்கத்தின் பெயர் |
மண்டலம் |
1 |
ஏஏ. 219 பெரியார் மாவட்ட கூட்டுறவு சலவைத் தொழிலாளர்கள் சங்கம் |
ஈரோடு |
வ.எண் |
கூட்டுறவுச் சங்கத்தின் பெயர் |
முகவரி |
1 |
கப்பாலா பணியாளர் நல நிலக்குடியேற்றக் கூட்டுறவு பண்ணைச் சங்கம், கொன்னசால் |
மேலாண்மை இயக்குநர் ,எருமாடு அஞ்சல்,பந்தலூர் வட்டம், நீலகிரி. |
2 |
மேட்டுப்பட்டி கோகுலநாத நிலக்குடியேற்றக் கூட்டுறவுச் சங்கம் |
மேலாண்மை இயக்குநர்,மேட்டுப்பட்டி காலனி,மேட்டுப்பட்டி அஞ்சல் ,வாழப்பாடி வட்டம்,சேலம் - 636 111. |
3 |
சிறுவாச்சூர் நிலக்குடியேற்றக் கூட்டுறவுச் சங்கம் |
மேலாண்மை இயக்குநர், |
4 |
அந்தியூர் நிலக்குடியேற்றக் கூட்டுறவுச் சங்கம் |
மேலாண்மை இயக்குநர்,வெள்ளைப் பிள்ளையார் கோவில் அருகில், பர்கூர் ரோடு,அந்தியூர் -638 501 |
5 |
கெட்டி சமுத்திரம் நிலக்குடியேற்றக் கூட்டுறவுச் சங்கம் |
மேலாண்மை இயக்குநர்,வெள்ளை பிள்ளையார் கோவில் அருகில், பர்கூர் ரோடு,அந்தியூர் – 638501 |
6 |
அத்தாணி நிலக்குடியேற்றக் கூட்டுறவுச் சங்கம் |
மேலாண்மை இயக்குநர்,ஏ.செம்புளிச்சாம்பாளையம் (அஞ்சல்), அத்தாணி ஈரோடு- 638502 |
7 |
தளிக்கோட்டை நிலக்குடியேற்றக் கூட்டுறவுச் சங்கம்., |
மேலாண்மை இயக்குநர், |
8 |
கருவாக்குருச்சி நிலக்குடியேற்றக் கூட்டுறவுச் சங்கம்., |
மேலாண்மை இயக்குநர்,1/15, கருவாக்குருச்சி காலனி, முக்குளம் சாத்தனூர் அஞ்சல்,மன்னார்குடி வட்டம்,திருவாரூர் மாவட்டம். |
9 |
புளியங்குளம் நிலக்குடியேற்றக் கூட்டுறவுச் சங்கம், |
மேலாண்மை இயக்குநர்,புளியங்குளம்,கொளத்தூர்,தூத்துக்குடி – 628 903 |
10 |
சிறு சேரி அரிசன நிலக்குடியேற்றக் கூட்டுறவுச் சங்கம். |
மேலாண்மை இயக்குநர்,படூர் அஞ்சல், சிறுசேரி ,காஞ்சிபுரம் - 603 103. |
11 |
மெய்யூர் கூடப்பாக்கம் முன்னாள் இராணுவத்தினர் நிலக்குடியேற்றக் கூட்டுறவுச் சங்கம். |
திருவள்ளூர் |
வ.எண் |
சங்கத்தின் பெயர் |
முகவரி |
1 |
அக்னீஸ்வர் சுவாமி குத்தகைதாரர் கூட்டுறவு பண்ணை சங்கம் |
மேலாண்மை இயக்குநர், திருப்புகளூர், நாகப்பட்டினம் தாலுக்கா, நாகை. |
2 |
மேலராமன் சேத்தி குத்தகைதாரர் கூட்டுறவு பண்ணை சங்கம் |
மேலாண்மை இயக்குநர், வடக்கு தெரு, புளிஞ்சேரி மேலராமன் சேத்தி, சீதக்கமங்கலம் அஞ்சல், குடவாசல் வட்டம், திருவாரூர். |
3 |
திருகண்ணமங்கை குத்தகைதாரர் கூட்டுறவு பண்ணை சங்கம் |
மேலாண்மை இயக்குநர், தோப்புத்தெரு, திருகண்ணமங்கை, குடவாசல் வட்டம், திருவாரூர். |
4 |
சிந்தாமணிபேரி குத்தகைதாரர் கூட்டுறவு பண்ணை சங்கம் |
மேலாண்மை இயக்குநர், |
5 |
புளியரை குத்தகைதாரர் கூட்டுறவு பண்ணை சங்கம் |
மேலாண்மை இயக்குநர், கொல்லம் மெயின்ரோடு, கேசவபுரம், |
6 |
திருவிலஞ்சி குமரன் குத்தகைதாரர் கூட்டுறவு பண்ணை சங்கம் |
மேலாண்மை இயக்குநர், |
7 |
திருக்குற்றாலநாத சுவாமி பாட்டபத்து குத்தகைதாரர் கூட்டுறவு பண்ணை சங்கம் |
மேலாண்மை இயக்குநர், |
8 |
சிவகிரி குத்தகைதாரர் கூட்டுறவு பண்ணை சங்கம் |
மேலாண்மை இயக்குநர், |
9 |
தேவதானம் அம்மையப்ப குத்தகைதாரர் கூட்டுறவு பண்ணை சங்கம் |
மேலாண்மை இயக்குநர், தேவதானம், |
10 |
தேவதானம் விவசாய குத்தகைதாரர் கூட்டுறவு பண்ணை சங்கம் |
மேலாண்மை இயக்குநர், தேவதானம், |
11 |
குற்றாலம் குத்தகைதாரர் கூட்டுறவு பண்ணைச் சங்கம் |
மேலாண்மை இயக்குநர், குற்றாலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பிரதான சாலை, குற்றாலம், மயிலாடுதுறை மாவட்டம் |
வ.எண் |
பெயர் |
மாவட்டம் |
1 |
வல்லம் முந்திரிக்கொட்டை சேகரிப்போர் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
அரியலூர் |
2 |
சக்தி தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
சென்னை |
3. |
தமிழ்நாடு திடக்கழிவு மேலாண்மை தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
சென்னை |
4 |
சென்னை மாவட்ட மாகாத்மா காந்தி தொழிலாளர் ஒப்பந்த மற்றும் திறன் வளர்ச்சி கூட்டுறவுச் சங்கம் |
சென்னை |
5 |
கோயம்புத்தூர் உபயோகப்படுத்தப்பட்ட தேவையற்ற பொருட்களை சேகரிக்கும் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
கோவை |
6 |
கிணத்துக்கடவு கல் உடைப்போர் தொழிலாளர்கள் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
கோவை |
7. |
கோவை மாவட்ட திறன்மிகு பணியாளர் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
கோவை |
8 |
பழஞாநல்லூர் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
கடலூர் |
9. |
மஞ்சகொல்லை தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
கடலூர் |
10. |
காரிமங்கலம் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
தருமபுரி |
11. |
பையர் நத்தம் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
தருமபுரி |
12. |
தருமபுரி மாவட்ட மாகாத்மா காந்தி தொழிலாளர் ஒப்பந்த மற்றும் திறன் வளர்ச்சி கூட்டுறவுச் சங்கம் |
தருமபுரி |
13. |
தாம்பரம் கடப்பேரி ஆதிதிராவிடர் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
காஞ்சிபுரம் |
14. |
டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.பாலாறு ஆற்று மணல் விற்பனை தொழிலாளர் ஒப்பந்த கூட்டுறவுச் சங்கம். |
காஞ்சிபுரம் |
15. |
காந்தி காமராஜர் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
காஞ்சிபுரம் |
16. |
நெடுங்குன்றம் அறிஞர் அண்ணா தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
காஞ்சிபுரம் |
17. |
முள்ளிப்பாக்கம் ஆதிதிராவிடர் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
காஞ்சிபுரம் |
18. |
நெடுங்குன்றம் ஆதிதிராவிடர் அறிஞர் அண்ணா தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
காஞ்சிபுரம் |
19. |
காமராஜபுரம் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
காஞ்சிபுரம் |
20. |
மேடவாக்கம் ஆதிதிராவிடர் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
காஞ்சிபுரம் |
21. |
பாரதியார் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
காஞ்சிபுரம் |
22. |
தமிழ்நாடு கல்லுடைப்போர் தொழிலாளர்ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
காஞ்சிபுரம் |
23. |
கொல்லச்சேரி ஆதிதிராவிடர் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
காஞ்சிபுரம் |
24. |
காஞ்சிபுரம் மாவட்ட வண்ணம் தீட்டுதல் மற்றும் தச்சுத் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
காஞ்சிபுரம் |
25. |
அறிஞர் அண்ணா வினைல் டிஜிட்டல் தொழில் நுட்ப தொழிலாளர் தொழிலாளர் ஒப்பந்த கூட்டுறவு சங்கம் |
காஞ்சிபுரம் |
26. |
டாக்டர் கலைஞர் ஆதிதிராவிடர் தொழிலாளர்ஒப்பந்த கூட்டுறவு சங்கம் |
காஞ்சிபுரம் |
27. |
தட்டாம்பேடு வன இலாகா தொழிலாளர் ஒப்பந்த கூட்டுறவு சங்கம் |
காஞ்சிபுரம் |
28. |
நுகும்பல் ஆதிதிராவிடர் தொழிலாளர் ஒப்பந்த கூட்டுறவு சங்கம் |
காஞ்சிபுரம் |
29. |
அகஸ்தீஸ்வரம் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
கன்னியாகுமரி |
30. |
கன்னியாகுமரி மாவட்ட தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
கன்னியாகுமரி |
31. |
தக்கலை தொழிலாளர்ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
கன்னியாகுமரி |
32. |
புலியூர் சாலை தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
கன்னியாகுமரி |
33. |
கரூர் மாவட்ட மாகாத்மா காந்தி தொழிலாளர் ஒப்பந்த மற்றும் திறன் வளர்ச்சி கூட்டுறவுச் சங்கம் |
கரூர் |
34. |
கிருஷ்ணகிரி தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
கிருஷ்ணகிரி |
35. |
பர்கூர் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
கிருஷ்ணகிரி |
36. |
மதுரை தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
மதுரை |
37. |
மதுரை ஊரக தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
மதுரை |
38. |
மதுரை மாவட்ட மாகாத்மா காந்தி தொழிலாளர் ஒப்பந்த மற்றும் திறன் வளர்ச்சி கூட்டுறவுச் சங்கம் |
மதுரை |
39. |
மயிலாடுதுறை வட்டார ஆதிதிராவிடர் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
நாகப்பட்டினம் |
40. |
சேலம் மாவட்ட மாகாத்மா காந்தி தொழிலாளர் ஒப்பந்த மற்றும் திறன் வளர்ச்சி கூட்டுறவுச் சங்கம் |
சேலம் |
41. |
பரியாமருதுப்பட்டி தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
சிவகங்கை |
42. |
திருப்புவனம் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
சிவகங்கை |
43. |
பெல் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
திருச்சி |
44. |
காணி குடியிருப்பு மலைவாழ் மக்கள் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
திருநெல்வேலி |
45. |
திருநெல்வேலி மாவட்ட மாகாத்மா காந்தி தொழிலாளர் ஒப்பந்த மற்றும் திறன் வளர்ச்சி கூட்டுறவுச் சங்கம் |
திருநெல்வேலி |
46. |
திருவள்ளூர் மாவட்ட வண்ண ஓவியர் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
திருவள்ளூர் |
47. |
ஆர். கே. பேட்டை வண்ண ஓவியர் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
திருவள்ளூர் |
48. |
திறன் பெற்ற மற்றும் திறன் பெறாத ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கம். |
திருவள்ளூர் |
49. |
உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் வட்ட ஆதி திராவிட / பழங்குடியினர் / மலைவாழ் விவசாய கூலி மற்றும் கட்டுமான தொழில் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
திருப்பூர் |
50. |
தூத்துக்குடி மாகாத்மா காந்தி தொழிலாளர் ஒப்பந்த மற்றும் திறன் வளர்ச்சி கூட்டுறவுச் சங்கம் |
தூத்துக்குடி |
51. |
திம்மச்சூர் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
விழுப்புரம் |
52. |
செண்பகத்தோப்பு மலைவாழ் மக்கள் தொழிலாளர்ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
விருதுநகர் |
53. |
கோட்டையூர் கல் உடைக்கும் தொழிலாளர்கள் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் |
விருதுநகர் |
வ.எண். |
சங்கத்தின் பெயர் பெயர் |
மண்டலம் |
1 |
நவீனப் பொறியாளர்கள் கட்டுமான கூட்டுறவுச் சங்கம் |
சென்னை |
2 |
பியர்ல்ஸ் பொறியாளர்கள் கட்டுமான கூட்டுறவுச் சங்கம் |
சென்னை |
வ.எண். |
சங்கத்தின் பெயர் |
மண்டலம் |
1 |
சேலம் மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டுறவுச் சங்கம் |
சேலம் |
2 |
ஈரோடு மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டுறவுச் சங்கம் |
ஈரோடு |
3 |
கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டுறவுச் சங்கம் |
கோவை |
4 |
திண்டுக்கல் மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டுறவுச் சங்கம் |
திண்டுக்கல் |
வ.எண். |
சங்கத்தின் பெயர் |
மண்டலம் |
1 |
தளவாய்புரம் ஆ.ச.பழனிசாமி நாடார் சுகாதாரக் கூட்டுறவுச் சங்கம் |
விருதுநகர் |
வ.எண். |
சங்கத்தின் பெயர் |
மண்டலம் |
1 |
உடல் ஊனமுற்றோர் கூட்டுறவுச் சங்கம் |
சென்னை |
2 |
தமிழ்நாடு கழிவுத்தாள் சேகரிப்போர் கூட்டுறவுச் சங்கம் |
சென்னை |
3 |
தமிழ்நாடு ஓவியர்கள் கூட்டுறவுச் சங்கம் |
சென்னை |
4 |
திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூட்டுறவு சேவைச் சங்கம் |
சென்னை |
5 |
சி.எம்.டி.ஏ, கோயம்பேடு வணிக வளாக தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டுறவு சேவைச் சங்கம் |
சென்னை |
6 |
தமிழ்நாடு மாநில கணக்குகள் மற்றும் வரிகள் சேவைகள் கூட்டுறவு சங்கம் |
சென்னை |
7 |
மதுரை நகர ரிக்ஷா ஓட்டுநர் கூட்டுறவுச் சங்கம் |
மதுரை |
8 |
பூந்தமல்லி கால்நடை தீவன உற்பத்தி மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கம் |
திருவள்ளூர் |
9 |
திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் நலக் கூட்டுறவுச் சங்கம் |
திருச்சிராப்பள்ளி |
10 |
கிருஷ்ணகிரி மாவட்ட கல் மற்றும் ஜல்லி உடைப்போர் கூட்டுறவுச் சங்கம் |
கிருஷ்ணகிரி |